இரு பிரமாண்டங்கள்; ஒரு இசையமைப்பாளர். ஆம், தமிழ்நாடு அரசு நடத்தும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான சிறப்பு பாடலை தயாரித்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். செஸ் ஒலிம்பியாட் எந்த அளவிற்கு பிரம்மாண்ட ஏற்பாடு என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்த பிரம்மாண்டத்திற்கு பிரம்மாண்டமாக இசையமைத்து பாடலை வெளியிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான். இசையும் அவரே, பாடகரும் அவரே. 


இப்போது, எங்கு பார்த்தாலும் செஸ் ஒலிம்பியாட் பாடல்கள் தான், பட்டி தொட்டியெல்லாம் கேட்கிறது. உலக செஸ் சாம்பியன்ஸ்கள் பலரும், தங்களின் ரிங் டோனாக செஸ் ஒலிம்பியாட் பாடலை வைத்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். சரி இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.



இந்நிலையில், மற்றொரு பிரம்மாண்டமான பொன்னியின் செல்வன் 1 படத்தின் முதல் பாடல், நேற்று வெளியானது. சென்னையில் மால் ஒன்றில் நடந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில் அந்த பாடல் வெளியிடப்பட்டது. பொன்னி நதி எனத் தொடங்கும் அந்த பாடல், பலராலும் ரசித்து கேட்கப்பட்டு வருகிறது. 


பிரம்மாண்டமாக தயாரான பொன்னியின் செல்வன் படத்திற்கு, அதே பிரம்மாண்ட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைத்துள்ளார். இப்போது என்ன விமர்சனம் எழுந்திருக்கிறது என்றால், பொன்னியின் செல்வனின் பொன்னி நதி பாடலும், செஸ் ஒலிம்பியாட் பாடலும் ஒரே மாதிரி இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


ஒரே இசை, ஒரே குரல் என்பதால் இந்த தோற்றம் ஏற்பட்டிருக்கலாம். ஏழு ஸ்வரங்களில், அவை சிற்சில வேறுபாடுகளில் இருக்கும். ஆனால், இரண்டும் ஒன்று என கூறமுடியாது. பின்னணி குரல்கள், சில இசைக்கருவிகள் அனைத்தும், செஸ் ஒலிம்பியாட் பாடலைப் போலவே, பொன்னி நதி பாடலுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ,இந்த குழப்பம் ஏற்பட்டிருக்கலாம். 



பொதுவாக, ஏ.ஆர்.ரஹ்மான் பாடும் போது, அவரது அக்மார்க் வாய்ஸ், ஒரே மாதிரி இருக்கும். அதனால் கூட இந்த ஒற்றுமை தெரிந்திருக்கலாம் என்கிறார்கள் இசை தெரிந்தவர்கள். எப்படி இருந்தாலும், இசை என்பது புதிதல்ல. புதுமை தான். ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம் என்பார்களே அப்படி தான், ஒவ்வொரு பாடலும் பிறக்கிறது. ஒரே நேரத்தில், இரு பாடல்களும் கவனம் பெற்ற பாடல்கள்; இரண்டுமே பிரம்மாண்டத்தில் கொஞ்சமும் குறையாதவை என்பதால், இந்த குழப்பம் ஏற்பட்டிருக்கலாம். ஆனாலும், சிலர் சந்தேகிக்கும் வகையில் ஹம்மிங்,  கோரஸ் இருப்பதால், இந்த குழப்பம் ஏற்பட்டிருக்கலாம். 


பொன்னியின் செல்வன் தொடர்பான ஏபிபி வீடியோஸ் இதோ:


 



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண