கொரோனாவால் பெற்றோரை இழந்த தனியார் பள்ளி மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை பள்ளி கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாணவர்கள் படிப்பை தொடருவதையும் உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சமூக நலத்துறை விடுத்த கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்த கோரிக்கையில், “NCPCR வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் சமூக நலத்துறை வெளியிட்டுள்ள அரசாணை (நிலை) எண். 24, சமூக நலம் மற்றும் பெண்கக் ரிமையியல் (SW 5(1))த்துறை நாள். 11.06.2021-யை தொடர்ந்து கோவிட்ட ஆல் பாதிக்கப்பட்டு இறந்த பெற்றோர்களின் குழந்தைகள் தனியார் பள்ளி கல்வி பயின்று கொண்டு இருப்பின் அவர்களுக்குக் கல்வி கட்டணம் பெறுவதிலிருந்து விலக்களித்து, தொடர்ந்து அவர்கள் அதே பள்ளியில் நத்வி பயில்வதை உறுதி செய்தல் வேண்டும்.
தனியார் பள்ளிகள் இந்தக் கல்வியாண்டிற்கான கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்வதற்குக் கருத்துருவினை உடனடியாக தனியார் பள்ளிக் கட்டண நிர்ணயக் குழுவிற்கு அனுப்பிடல் வேண்டும். அனைத்துப் பள்ளிகளும் கருத்துரு அனுப்பியதை உறுதிப்படுத்திடவும், அதனைத் தொடர்ந்து கண்காணிக்கவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது” எனக் கூறப்பட்டிருந்தது.
முன்னதாக பள்ளிக் கல்வித்துறை அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம்சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் உள்ள கூட்ட அரங்கில் 15.07.2022 மற்றும் 16.07.2022 அன்று நடைபெற்றது. கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கூட்டப்பொருள் குறித்தும் அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.
இதில் முக்கிய அம்சங்களாக,
* 1 ஆகஸ்ட் 2022 முதல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வருகைப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டாம். வருகைப் பதிவை TNSED செயலி வாயிலாகப் பதிவு செய்தால் மட்டும் போதுமானது.
* ஆசிரியர்கள் விடுமுறை விண்ணப்பிப்பதை TNSED செயலியில் மட்டும் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட வேண்டும்.
* முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் சுயவிவரங்களை EMIS ஒருங்கிணைப்பாளர் மூலம் பதிவேற்றம் செய்து முடிக்க வேண்டும்
* அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் உபரி பணியிடங்களை தேவைப்படும் அரசுப் பள்ளிகளுக்கு மாற்றுப்பணி 15.08.2022 -க்குள்வழங்க வேண்டும்.
* மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு பொறுப்பு தலைமை ஆசிரியர்களை நியமனம் செய்து நிர்வாகம் மற்றும் நிதி செலவினம் மேற்கொள்ள முழு அதிகார ஆணை வழங்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
ஆகியவை குறிப்பிடப்பட்டிருந்தன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்