தமிழ் சினிமாவின் முகத்தை மாற்ற முயற்சிக்கும் இயக்குநர்களில் பார்த்திபன் ஒருவர். புதிய பாதையில் ஆரம்பித்த அவரது பயணம் எப்போதும் வித்தியாசமாகவே இருந்திருக்கிறது.
சமீபத்தில் அவர் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தது. ஒரே ஒரு கதாபாத்திரத்தை மட்டும் திரையில் உலாவ விட்டு ரசிகர்களுக்கு எந்தவித சலிப்பும் தட்டாமல் அவர் கதையையும், திரைக்கதையையும் நகர்த்தி சென்ற விதம் வியப்பை உருவாக்கியது.
மேலும் அந்தப் படம் சிறப்பு நடுவர் தேர்வுக்கான தேசிய விருதை வென்றது. விமர்சன ரீதியாக அந்தப் படம் பெரும் வரவேற்பை பெற்றாலும் வணிக ரீதியாக சரியாக போகவில்லை. இருந்தாலும் அவர் தனது சோதனை முயற்சியை கைவிடாமல் இருக்கிறார்,
அந்தவகையில், ஒரே ஒரு கதாபாத்திரத்தை வைத்து ஒத்த செருப்பை உருவாக்கிய பார்த்திபன் தனது அடுத்தப் படமான “இரவின் நிழல்” படத்தை சிங்கிள் ஷாட்டில் எடுத்திருக்கிறார். அவரது இந்த முயற்சி அனைவரது புருவத்தையும் உயர செய்தது. மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்திருக்கும் நிழலில் தற்போது படத்துக்கு பின்னணி இசை அமைக்கும் பணி ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில், பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இரவின் நிழல்-இன்று இசை புயல் ARR பின்னணி இசை கோர்ப்பு இனிதே துவங்கியது முழு படத்தை முதலில் பார்த்ததே ஆஸ்கார் தான்.
”இது single shot முதல் படம் மட்டுமல்ல முதன்மையான படமாகவும் உதாரண படமாகவும் இருக்கும்-பாராட்டி keyboard-ல் விரல் ஓட்டினார்-வைரல் ஆகப்போகும் இசை பிரளயத்திற்காக” என பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Rajinikanth Press Meet: “இப்போ போறேன்.. அவார்டு வாங்கிட்டு வந்ததும் பேசுறேன்” - செய்தியாளர்களை சந்தித்தார் ரஜினிகாந்த்
Biggboss Tamil 5 | நேராவே சொல்லிடுறேன்... என்ன இவ்வளவு டென்ஷன் ஆகுறீங்க.. கமல் வைத்த ட்விஸ்ட்...