AR Rahman - Prabhu deva: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர் பிரபுதேவா இருவரும் 25 ஆண்டுகளுக்கு பிறகு புதிய படத்தில் இணைந்துள்ளனர்.

Continues below advertisement

25 ஆண்டுகளுக்கு பின் இணையும் பிரபுதேவா - ரஹ்மான்:

இந்திய சினிமாவில் ஒரு சாதனையாளராக ஏராளமான ரசிகர்களை தன்னுடைய நடன ஆளுமையால் கவர்ந்தவர் பிரபுதேவா. இளம் வயதிலேயே பரதநாட்டியம் உள்ளிட்ட பல நடனங்களை கற்று தேர்ந்த பிரபுதேவா திரையில் கூட்டத்தில் ஒருவராக நடன கலைஞராக தோன்றினார்.

நடன இயக்குநராக இருந்த போதிலும் அவரின் முகம் ஒரு நடன கலைஞராக அனைத்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பதிந்து போனது.அன்று முதல் இன்று வரை இந்திய அளவில் நடனம் என்றால் பிரபு தேவா தான் எனும் அளவிற்கு ஒரு பெஞ்ச் மார்க் செட் செய்தவர் பிரபுதேவா. 

Continues below advertisement

இந்த நிலையில், பிரபுதேவா நடிக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதாவது, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர் பிரபுதேவா இருவரும் 25 ஆண்டுகளுக்கு பிறகு புதிய படத்தில் இணைந்துள்ளனர்.  பிகைண்ட்வுட்ஸ் தயாரிப்பில் மனோஜ் என்.எஸ்.இயக்கத்தில் பிரபுதேவா, யோகி பாபு, அஜுவர்கிஸ், அர்ஜுன் அசோகன் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.  

போஸ்டர் வெளியீடு:

எனவே, இந்த படம் ஏ.ஆர்.ரகுமான், பிரபுதேவா இணையும் 6வது திரைப்படமாகும். முதன்முறையாக ஏ.ஆர்.ரகுமான்-பிரபு தேவா கூட்டணி 1994ஆம் ஆண்டு காதலன் படத்தின் மூலம் இணைந்தார்கள். இதனைத் தொடர்ந்து, லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, மின்சார கனவு உள்ளிட்ட 5 படங்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். 

இந்த நிலையில், ஆறாவது முறையாக ஏ.ஆர்.ரகுமான், பிரபுதேவா இணைகின்றனர் என்று  போஸ்டருடன் ஏ.ஆர்.ரகுமான் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருக்கிறார்.  முக்கால முக்கலாபுல்லா பாடலில் இடம்பெற்ற தலை, கைகள், கால்கள் இல்லாத பிரபுதேவாவின் போஸ்டர் இடம்பெற்றிருக்கிறது. இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.