பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் துபாயில் இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளத்தை ஏற்பாட்டாளர்கள் வித்தியாசமாக விளம்பரம் செய்துள்ளனர்.
இந்திய திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். 1992 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
ஸ்லம்டாக் பில்லியனர் படத்திற்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்றதன் மூலமாக. ஏ.ஆர்.ரஹ்மானின் புகழ் உலகம் முழுவதும் பரவியது. சமீபகாலமாக ட்விட்டரில் ஆக்டிவ் ஆக இருக்கும் அவர் அவ்வப்போது சில பதிவுகளையும் வெளியிடுவது வழக்கம். அவ்வப்போது இசை நிகழ்ச்சி நடத்தும் ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த சில ஆண்டுகளாகவே நடக்கவே இல்லை. அந்த குறையைப் போக்க 7 ஆண்டுகளுக்குப் பின் 2023 ஜனவரி மாதம் 28 ஆம் தேதி நடக்கிறது. இதனால் அங்குள்ள இசைப் பிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதற்கிடையில் இந்த இசை நிகழ்ச்சி குறித்த தகவலை மக்கள் மத்தியில் கொண்டுச் சேர்க்க ஏற்பட்டாளரான முகமது யூசுப் வித்தியாசமாக முடிவு செய்தார். அதன்படி நிகழ்ச்சியும் நடத்துவதோடு மட்டுமல்லாமல், அதனை விளம்பரமாக மட்டுமே பார்க்காமல் அது சாதனை புத்தகத்திலும் இடம் பெற வேண்டும் என்பதற்காக 10,000 அடி உயரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக பாரசூட்டில் இருந்து குதித்து அறிவிப்பை வெளியிட முடிவு செய்தார். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குழுவினர் ஹெலிகாப்டரில் பறந்து 10 ஆயிரம் அடி உயரத்திலிருந்து நிகழ்ச்சி குறித்த விளம்பரம், மலேஷிய கொடி உள்ளிட்டவைகளுடன் குதிப்பதற்காக பயிற்சி எடுத்தனர்.
உயிரைப் பணயம் வைத்து நடைபெற்ற இந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பாராசூட் மூலமாக திட்டமிட்ட இடத்தில் குழுவினர் இறங்கினர். இந்த சாதனை அந்நாட்டின் 'மலேஷியா புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ' புத்தகத்தில் அதிக உயரத்தில் இருந்து குதிக்கப்பட்ட சாதனையாக இடம் பெற்றுள்ளது. மேலும் இப்படி விளம்பரப்படுத்தப்படுவது மலேசியாவில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.