AR Rahman concert: அண்மையில் ஏ.ஆர். ரஹ்மான் நடத்திய ‘மறக்குமா நெஞ்சம்‘ நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளை தொடர்ந்து டிக்கெட் வாங்கிவிட்டு நிகழ்ச்சியை பார்க்காத ரசிகர்களை ஏ.ஆர். ரஹ்மான் பணத்தை திரும்ப செலுத்தியுள்ளார். 


மறக்குமா நெஞ்சம்:


கடந்த 10ம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஏர்.ஆர். ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் என்ற மாபெரும் இசை மாபெரும் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை காண சில்வன், கோல்டு, பிளாட்டினம் என்ற வகைகளில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. முன்பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் இசை நிகழ்ச்சியை காண பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டது. 






ஆனால், நிகழ்ச்சி அன்று ஏராளமான கூட்டம் கூடியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. டிக்கெட் வாங்கிய பலர் நிகழ்ச்சியை காண உள்ளே அனுமதிக்கப்படாமல் நுழைவு வாயிலேயே நிறுத்தப்பட்டனர். இதனால் அங்கு ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தில் சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே ஏ.ஆர். ரஹ்மானை சிலர் விமர்சித்து திட்டி தீர்த்தனர். நிகழ்ச்சியை திட்டமிட்டு ஒழுங்காக நடத்தவில்லை என குற்றம் சாட்டப்பட்டது. 






திருப்பி தரப்பட்ட பணம்:


நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் மீதும், ஏ.ஆர். ரஹ்மான் தரப்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கிடையே, நடந்த குளறுபடிகளுக்கு தானே பொறுப்பேற்பதாக கூறிய ஏ.ஆர். ரஹ்மான் டிக்கெட் வாங்கிவிட்டு நிகழ்ச்சியை பார்க்க முடியாதவர்கள் அதன் விவரத்தை இமெயில் செய்யுமாறு அறிவித்தார். அதனடிப்படையில் டிக்கெட் வாங்கிவிட்டு நிகழ்ச்சியை காணாதவர்களுக்கு பணம் திரும்ப செலுத்தப்பட்டு வருகிறது. 


ரூ.2000 முதல் ரூ.21000 வரை டிக்கெட் வாங்கியவர்களுக்கு, அவரவர் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கெனவே 400 பேருக்கு பணம் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் மேலும் 33 பேருக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க: Vinayakan: பொன்னியின் செல்வன் முதல் கே.ஜி.எஃப் வரை.. ஜெயிலர் நாயகன் விநாயகன் நடிக்க மறுத்த படங்கள்!