இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜாவுக்கு திருமணம்  சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை பதிவிட்டுள்ளனர்.


திருமணம் தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட கதீஜா, “ என்னுடைய வாழ்கையில் அதிகம் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நாள். என்னுடையவனை திருமணம் செய்துகொண்டேன்” என்று பதிவிட்டு இருக்கிறார். 


மகளின் திருமண நிகழ்வின் போட்டாவை ஏ.ஆர் ரஹ்மானும் தன்னுடைய சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டுள்ளார். அதில் குடும்பத்துடன் குரூப்பாக நின்று எடுத்த புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது. அந்த புகைப்படத்தில் சமீபத்தில் மறைந்த அவரது தாயின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. தாயின் மீது தீராத பாசம் கொண்ட ரஹ்மான்,மகளின் திருமண புகைப்படத்திலும் தாயை இடம்பெற செய்ததை பலரும் நெகிழ்ச்சியாக பதிவிட்டு வருகின்றனர் 






டிசம்பரில் நிச்சயதார்த்தம் 


கதீஜா ரஹ்மானுக்கும் ஆடியோ இன்ஜினியரும், தொழிலதிபருமான ரியாஸ்தீனுக்கும் கடந்த டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. அது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட கதீஜா, “ இறைவனில் அருளால் வளர்ந்து வரும் தொழிலதிபரும், ஆடியோ இன்ஜினீயருமான ரியாஸ்தீன் ஷேக் முஹம்மதுவுடன் எனக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நிச்சயதார்த்தம் கடந்த டிசம்பர் 29ஆம் தேதி என்னுடைய பிறந்த நாள் அன்று நெருங்கிய உறவினர்கள் சூழ நடைபெற்றது'' என்று அவர் பதிவிட்டு இருந்தார். 






 


 


யார் இந்த கதீஜா


கதீஜா தமிழில் எந்திரன் படத்தில் இடம்பெற்ற  ‘புதிய மனிதா’பாடலில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் இணைந்து பாடினார்.


 



தொடர்ந்து பிரபல பேண்டான  U2 உடன் இணைந்து  அஹிம்சா என்ற பாடலில் பணியாற்றி இருந்தார். தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ‘ஃபரிஷ்தா’ பாடலை பாடி அதை தனது யூடியூப் தளத்தில் வெளியிட்டார். கதிஜா ஒரு சமூக ஆர்வலரும் கூட..



 



பிரபல இசையமைப்பளாரான ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அமீன் என்ற மகனும், கதீஜா, ரஹீமா என்ற இரு மகள்களும் உள்ளனர். இதில் அமீன் இசைப்பயிற்சி மேற்கொண்டு வருவதோடு அவ்வப்போது சில பாடல்களையும் பாடி வருகிறார்.