ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி குறித்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை காவல்நிலையம் வரவழைத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளது.


சென்னை பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் 'மறக்குமா நெஞ்சம்' என்ற பெயரில் இசை கச்சேரி  நடைபெற்றது. இந்த கச்சேரிக்கு டிக்கெட் வாங்கிய பலரும் உள்ளே அனுமதிக்கப்படாமல் கூட நெரிசலில் வெளியே தத்தளித்தனர். கிழக்கு கடற்கரை சாலை எங்கும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பெரிய குளறுபடியே நடந்தது. இந்த விவகாரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.


இந்த நிலையில் விசாரணைக்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கானாத்தூர் காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்படலாம் என கூறப்படுகிறது.