தீனா படம் மூலமாக இயக்குநராக அவதாரம் எடுத்தவர் ஏ ஆர் முருகதாஸ். இந்தப் படம் கொடுத்த வரவேற்புக்கு பிறகு அடுத்தடுத்த படங்களை இயக்கினார். 2001 ஆம் ஆண்டு தீனா வெளியான நிலையில் 2002 ஆம் ஆண்டு விஜயகாந்தை வைத்து ரமணா படத்தை இயக்கினார். அதன் பிறகு கஜினி, 7ஆம் அறிவு, துப்பாக்கி, கத்தி, சர்கார் என்று பல படங்களை இயக்கினார். இவருடைய இயக்கத்தில் வந்த எல்லா படங்களும் ஹிட் கொடுத்த நிலையில் ஸ்பைடர், தர்பார் போன்ற படங்கள் வசூலில் சரிவை சந்தித்தது.


தற்போது சல்மான் கான் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் சிக்கந்தர் என்ற பாலிவுட் படத்தையும், சிவகார்த்திகேயன், ருக்மினி வசந்த், விக்ராந்த், பிஜூ மேனன் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகி வரும் மதராஸி படத்தையும் இயக்கி வருகிறார்.



செண்டிமெண்ட் பார்க்கும் சிவகார்த்திகேயன்; பொத்தி பாதுகாத்த மதராஸி சீக்ரெட்டை உடைத்த ஏ.ஆர்.முருகதாஸ்!


அமரன் படத்தின் சூப்பர் டூப்பர் ஹிட்டுக்கு பிறகு சிவகார்த்திகேயன் மதராஸி மற்றும் பராசக்தி படங்களில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனின் 40ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மதராஸி டைட்டில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தான் இந்த படத்தின் கதை குறித்து இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: வட இந்திய மக்கள் எப்படி நம்மை பார்க்கிறார்கள் என்பது தான் மதராஸி படத்தின் கதை. அதுமட்டுமின்றி படத்தின் டைட்டில் கூட வட இந்திய மக்கள் தென்னிந்திய மக்களை அழைக்கும் வார்த்தை தான் என்று குறிப்பிட்டுள்ளார்.


மதராஸி படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் தர்பார். ரஜினிகாந்த், நயன் தாரா நடிப்பில் 2020 ஆம் ஆண்டு திரைக்கு வந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் 5 ஆண்டுகளாக எந்தப் படமும் இயக்கவில்லை. இந்த நிலையில் தான் 5 ஆண்டுகளுக்கு பிறகு முருகதாஸ் சிக்கந்தர் மற்றும் மதராஸி ஆகிய 2 படங்களை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




சிவகார்த்திகேயனின் வேண்டுகோளுக்கிணங்க இந்தப் படத்திற்கு மதராஸி என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கு காரணம், சிவகார்த்திகேயனுக்கு பழைய படங்களின் டைட்டில் அதிகளவில் ஹிட் கொடுத்து வரும் நிலையில் அமரன் கொடுத்த மாஸ் வரவேற்பு காரணமாக அதே டிரிக்கையும் இந்தப் படத்தில் பாலோ பண்ணுகிறார் என்று கூறப்படுகிறது.