கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் அனுஷ்கா ஷெட்டி விக்ரம் பிரபு நடித்துள்ள காட்டி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தென் இந்திய சினிமாவின் வசூல் ராணியாக கருதப்படும் அனுஷ்கா ஷெட்டி காட்டி படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தாரா. காட்டி திரைப்படம் ரசிகர்களை கவர்ந்ததா ? காட்டி படத்திற்கு ரசிகர்கள் என்ன விமர்சனம் சொல்லியிருக்கிறார்கள் என பார்க்கலாம்
காட்டி திரைப்பட விமர்சனம்
கிழக்குத் தொடர்ச்சி மலையில் பெரியளவில் நடைபெறும் கஞ்சா ஏற்றுமதியை மையமாக வைத்து காட்டி திரைப்படம் உருவாகியுள்ளது . தசரா , புஷ்பா ஆகிய படங்களைப் போன்ற ராவான ஒரு ஆக்ஷன் டிராமா படத்தை இயக்குநர் முயற்சி செய்திருக்கிறார். ஆனால் சுமாரான திரைக்கதை படத்தை சராசரியான ஒரு அனுபவமாக மாற்றுகிறது. ஒரு சில இடங்கள் சுவாரஸ்யமாக இருந்தாலும் இந்த காட்சிகள் மெருகேற்றப்படவில்லை. ஏற்கனவே பல படங்களில் பார்த்த அதே காட்சியமைப்புகள் , யூகிக்கக் கூடிய கதை என படம் சோர்வளிக்கிறது. சூப்பர் என்று சொல்லும்படி எந்த காட்சியும் இல்லை. இயக்குநர் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். மிக அழுத்தமான கதை இருந்து படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை