தென்னிந்திய சினிமா ரசிகர்கள் தேவசேனாவாக கொண்டாடிய அனுஷ்கா ஷெட்டி 'பாகுபலி' படத்தின் பிளாக் பஸ்டர் ஹிட்டுக்கு பிறகு எந்த மொழி படங்களிலும் காணப்படாமல் ரசிகர்களை ஏங்க வைத்தார். ஏற்கனவே முன்னணி நடிகைகளின் வரிசையில் இருந்த அனுஷ்கா, பாகுபலி: தி கன்க்ளூஷனுக்குப் பிறகு மிக பெரிய வரவேற்பை பெற்றார் ஆனால் அதற்கு பிறகு பெரிய படங்களில், பான் இந்திய படங்களில் காணவில்லை. 2018-ஆம் ஆண்டில் வெளியான பகமதி என்ற தெலுங்கு திரைப்படம் மற்றும் கொரோனா காலகட்டத்தில் ஓடிடியில் இரு மொழிகளில் வெளியான 'நிசப்தம்' படத்திற்கு பிறகு நடிப்பதில் இருந்து மூன்று ஆண்டுகள் பிரேக் எடுத்துக் கொண்டார்.
தெலுங்கில் ரீ என்ட்ரி :
தற்போது தெலுங்கில் மீண்டும் காதல் படமான "மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி" படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார் அனுஷ்கா ஷெட்டி. இப்படத்தில் செஃப் அன்விதா ரவளி ஷெட்டியாக நடிக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற நேர்காணலில் தனது பிரேக் குறித்து பேசியிருந்தார். "பாகுபலியை முடித்தவுடன், பாகமதி படத்தில் கமிட்டாகி நடித்தேன். ஆதற்கு பிறகு ஒரு பிரேக் எனக்கு மிகவும் அவசியமான ஒன்றாக இருந்தது. எதிர்காலத்தில் நான் படங்களில் தொடர்ந்து நடிக்க அது தேவையான ஒன்றாக இருந்தது. அதற்கான காரணங்கள் என எதுவும் இல்லை. நான் ஸ்க்ரிப்ட் எதையும் அந்த நேரத்தில் கேட்க கூட இல்லை. ஆனால் தற்போது ஸ்க்ரிப்ட் கேட்க துவங்கியுள்ளேன். அது எந்த மொழி படமாக இருந்தாலும் நல்ல கதையாக இருந்தால் நிச்சயம் நடிப்பேன்" என கூறியிருந்தார்.
பாலிவுட்டில் நடிப்பது குறித்து உங்களின் கருத்து என்ன என கேட்டதற்கு " நம்பிக்கை உள்ளது, உண்மையில் ஏதாவது நல்ல கதை வந்தால் நிச்சயம் செய்வேன்" என்றார்.
2005ம் ஆண்டு தெலுங்கில் 'சூப்பர்' என்ற படத்தின் மூலம் திரைப்பயணத்தை தொடங்கிய அனுஷ்கா ஆண்டிக்கு மூன்று அல்லது நான்கு படங்களில் நடித்து விடுவார். திறமையான நடிகையாக வலம் வந்தவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக பெரிய அளவில் படங்களில் எதுவும் நடிக்கவில்லை. இடையில் கொரோனா தொற்று காரணமாக "மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி" திரைப்படம் எடுக்க முடியாமல் போனது. பின்னர் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட படம் தற்போது முழுவதுமாக முடிவடைந்து செப்டம்பர் 7ம் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தேதி வெளியானது. "மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி" திரைப்படத்தில் அனுஷ்காவின் பக்கத்துக்கு வீட்டு பையனாக நவீன் பாலிஷெட்டியை சந்திக்கிறார். வெளியான இப்படத்தின் டிரெய்லர் தனித்துவத்துடன் இருந்ததால் டோலிவுட் ரசிகர்களின் கவனம் பெற்றது.