பிப்ரவரி மாதத்தை உலகமெங்கும் உள்ள காதலர்கள் உருகி உருகி கொண்டாடுகிறார்கள்.


ஆண்டு தோறும் பிப்ரவரி 14 ஆம் தேதியை உலகம் முழுவதும் பல நாடுகள் வேலன்டைன்ஸ் டே என்று காதலர் தினமாகக் கொண்டாடி வருகிறது. காதலர் தினத்தன்று காதலர்கள் தங்கள் நேரங்களை ஒன்றாக செலவு செய்து சிறப்பிப்பார்கள். அதனை கொண்டாடுவதற்கு என்று உலக வழக்கம் ஒன்று உள்ளது. ஏழு நாட்களுக்கு என்னென்ன செய்யக்வேண்டும் என்று வரை முறைகள் உள்ளன. ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு பெயர் வைத்து அதற்கேற்றார்போல் நாட்களை கொண்டாட வேண்டும் என்று கூறுகின்றனர். அப்படி காதலர் தினம் துவங்கும் ஒரே வாரத்திற்கு முன்பே அனைவரும் காதலர் வாரம் (Valentine's week) என்று பிப்ரவரி 7 ஆம் தேதி துவங்கி, அந்த வாரத்தில் ஸ்வீட் டே, பிராமிஸ் டே, கிஸ் டே (Kiss Day) என்று பல்வேறு தினத்தை கொட்டுவது வழக்கம். இந்த முறை அனைவருக்கும் தெரிந்த ஒன்று. காதலர் வாரத்தின் கடைசி நாளை தான் நாம் காதலர் தினமாக கொண்டடி வருகின்றோம். அந்த கடைசி நாளன்று அவரவர் காதல் நிலையை தெரிவிக்க ஒவ்வொரு நிறம் கூறுவார்கள். அந்த நிறத்தில் உடை அணிய வேண்டும் என்பதும் இந்த கொண்டாட்டங்களில் ஒன்று. அதில் சிங்கிள், கமிட்டட், ப்ரொபோசல் ரிஜெக்டட், ப்ரொபோஸ் செய்யப் போகிறவர், ஆகிய கேட்டகிரிகள் இருக்கும். 



ஆனால் காதலர் தினம் மகிழ்ச்சியின் கொண்டாட்டம் மட்டும்தான என்றால் இல்லை. 'புஷ்பான்னா ப்ளவருன்னு நெனச்சியா, ஃபயரு' என்று அடுத்த நாளே ஆண்டி-வேலன்டைன்ஸ் டே என்று குண்டை தூக்கி போடுவார்கள். நீங்கள் நினைப்பதுபோல் பேட்ட படத்தின் விஜய் சேதுபதி விடியோவை வாட்சப் ஸ்டேட்டசாக வைத்துக்கொண்டு சுற்றுபவர்கள் இல்லை ஆண்டி வேலன்டைன்ஸ். காதலர் தினம் முடிந்த அடுத்த நாளில் இருந்து காதலர் எதிர்ப்பு வாரம் (Anti-Valentine's week) என்று கொண்டாடப்படுகிறது. இந்த வாரம் பிப்ரவரி 15 ஆம் தேதியியில் இருந்து பிப்ரவரி 21 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், பிப்ரவரி 15 முதல் கிக் டே, பெர்ஃபியூம் டே, ஸ்லாப் டே, மற்றும் பல தினத்தை கொண்டடி வருகின்றனர். இந்த வாரத்தின் முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:-  



பிப்ரவரி 15, 2019 - ஸ்லாப் தினம் (Slap Day)


காதலர் தினத்துக்கு அடுத்த நாள் வரும் இந்த தினம்தான் ஸ்லாப் டே. நேற்றுதான் காதலித்தோம் அதே பெண்ணையோ, ஆணையோ, இன்று போய் அறைய வேண்டுமா என்று கேட்கக்கூடாது. இது முன்னாள் காதளர்களுக்கானது, நம்மை விட்டு பிரிந்து சென்ற முன்னாள் காதலர்களை சந்திப்பது ஆகும். அதற்காக அவரை சந்தித்து அறைய வேண்டுமா என்றால் இல்லை, அவர் நமக்கு தந்த வலி, ஞாபகங்கள் அனைத்தையும் அறைந்து ஓரங்கட்ட வேண்டும் என்பதே இதற்கு அர்த்தம்.


பிப்ரவரி 16, 2019 - கிக் தினம் (Kick Day) 


நம் முன்னாள் காதலர் மூலம் உருவான நெகட்டிவிட்டி, கெட்ட எண்ணங்கள் அணைத்தயும் கிக் செய்து விரட்டுவதற்கான நாளே இந்த நாள். அவர்கள் தந்த பரிசுகளோ, அவர்களுக்கு தர வைத்திருந்த பரிசுகளோ இருந்தால் கூடுதலாக அதையும் எடுத்து வைத்து உதைத்து விளையாடலாம். 


பிப்ரவரி 17, 2019 - பெர்ஃபியும் தினம் (Perfume Day)


இந்த தினம், நாம் நம்மையே காதலிப்பதர்கான தினம் ஆகும். நாம் நம்மையே விரும்புவதற்கு ஏற்றார்போல நம்மை தகவமைத்துக்கொள்ள எடுத்துக்கொள்ள வேண்டிய நேரம் இது. அதற்காக கடை வீதிகளுக்கு சென்று உங்களுக்கு பிடித்த வாசத்தில் ஒரு பெர்ஃபியும் வாங்கி பயன்படுத்தலாம்.


பிப்ரவரி 18, 2019 - ஃப்ளேர்டிங்க் தினம் (Flirting Day)


இந்த நாள் மிகவும் ஸ்பெஷலான நாள், உங்களை யாரோ ஒருவருக்கு லேசாக பிடிக்கிறது, உங்களுக்கு யாரோ ஒருவரை லேசாக பிடிக்கிறது என்றால், அவர்களுடன் டேட் செய்யும் நாள் தான் இது. இதற்காக அழகான பிக் அப் லைன்களை தயார் செய்து சென்று அந்த குறிப்பிட்ட நபரிடம் கேட்டு அவர்களை டேட் செய்ய மேற்படி மரியாதையுடன் கேட்கலாம். பின்குறிப்பு: பிக் அப் லைன்களை, "ரெட் பென் இருக்கா? உங்கள கரெக்ட் பண்ணனும்", "விழும்போது வலிச்சுதா? எங்கிருந்து? வானத்தில் இருந்து", போன்றவற்றை நெட்டில் இருந்து பார்த்து செல்ல வேண்டாம். உங்களுக்கென்று ப்ரத்யேக சம்பவங்கள் விஷயங்கள் இருக்கும் அதன் மூலம், கிரியேட்டிவாக யோசித்து செயல்படவும்.


பிப்ரவரி 19, 2019 - உறுதி மொழி தினம் (Confession Day)


இந்த தினத்தில் நீங்கள் அவர்களிடம் என்ன விதமான உணர்வுகளில் இருக்கிறீர்கள், அவர்களிடம் என்ன விதமான விஷயங்களை எதிர்பார்க்கிறீர்கள் என்று தெளிவாக எடுத்துரைக்கும் நாள். நீங்கள் யாரிடமும் சொல்லாத தவறுகளை கூட எடுத்து சொல்லலாம்.


பிப்ரவரி 20, 2019 - மிஸ்ஸிங் தினம் (Missing Day)


இந்த நாள், நீங்கள் யாரை மிகவும் மோசமாக மிஸ் செய்கிறீர்களோ அவர்களிடம் எந்த அளவுக்கு இந்த மிஸ்ஸிங் வலிக்கிறது என்று புரிய வையுங்கள், அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், உங்கள் நண்பராக, உங்கள் குடும்ப உறுப்பினராக, காதலராக யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் இந்த விஷயத்தில் முன்னாள் காதலரிடம் சென்றுவிடாதீர்கள்… அப்புறம் வருத்தப்படுவீய!... 


பிப்ரவரி 21, 2019-  பிரேக்கப் தினம் (Breakup Day)


நீங்கள் உங்களது தற்போதைய காதல் வாழ்வு உங்களை மகிழ்வாக வைத்திருக்கவில்லை, மிகவும் டாக்சிக்காக இருக்கிறது, அந்த டாக்சிக்கில் இருந்தது போதும், இதற்கு மேல் முடியாது, இது என் உள் அமைதியை பாதிக்கிறது என்ற நிலையில் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், இது தான் சரியான நாள். இந்த நாளில் அவரை பிரேக்கப் செய்யலாம்.