தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா, நடிகர் , தயாரிப்பாளர், திரையரங்க உரிமையாளர், காஸ்மெடிக் பிராண்ட் உரிமையாளர் இப்படி பல அடையாளங்களை உருவாக்கி இருக்கிறார். ஜவான் மாதிரியான மிகப்பெரிய கமர்ஷியல் திரைப்படங்களில் நடித்த நயன்தாரா மறுபக்கம் சோலோவாக பல திறமையான இயக்குநர்களின் படங்களிலும் நடித்து வருகிறார். இன்னிலையில் இன்று அதாவது நவம்பர் 27ஆம் தேதி அன்னபூரணி படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. 


அன்னபூரணி படம் நயன்தாராவின் 75வது திரைப்படம் ஆகும். இந்த படத்தில் நயன்தாரா அவருக்கு ஜோடியாக ஜெய் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகர் சத்யராஜ் மற்றும் இயக்குந கே.எஸ். ரவிக்குமார் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளதாக தெரிகின்றது. இந்த படத்தினை நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். இசையமைப்பளர் எஸ். தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். 



இந்த ட்ரைலர் மொத்தம் 2.24 நிமிடங்கள் உள்ளது. இதில் நடிகர் ஜெய், ”இங்க எந்த கடவுளும் கறி சாப்பிடக்கூடாதுன்னு சொல்லல” என்ற வசனத்தினை பேசுகின்றார். அதற்கு நயன்தாரா ”அப்போ நான் Non-Veg சாப்பிட்டாக்கூட தப்பில்லனு சொல்றியா” என கூறுகின்றார். இந்தப் படம் வரும் டிசம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகின்றது. 


இதில் நயன்தாராவுடன் இணைந்து ஜெய், சத்யராஜ், கே.எஸ். ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, சச்சு, ரேணுகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நயன்தாராவின் 75-வது படமாக உருவாகி இருக்கும் அன்னபூரணி படத்தை, ஷங்கரின் உதவி இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார்.


படத்தின் கதை இதுவா? 


நயன்தாரா ஒரு வைணவக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாக இருக்கின்றார். அவருக்கு சிறு வயதில் இருந்தே இந்தியாவின் மிகப்பெரிய ஷெஃப் அதாவது இந்தியாவின் தலைசிறந்த சமையல் கலைஞராக உருவாகவேண்டும் என ஆசைப்படுகின்றார். ஆனால் அவரது ஆசையை எட்ட அவரது குடும்ப சூழலே அவருக்கு எதிராக இருக்கின்றது. ஒரு கட்டத்தில் குடும்பத்தில் எம்.பி.ஏ படிப்பதாக கூறி பொய் சொல்லிவிட்டு ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிக்கின்றார். இப்படியாக ஹோட்டல் மேனேஜ்மெண்ட் சேர்ந்த இடத்தில் ஜெய்யைச் சந்திக்கின்றார். ஜெய்யுடன் ஏற்படும் பழக்கம் அவருக்கு தனது கனவினை எட்டுவதற்காக உடன் நிற்கும் உத்வேகப்படுத்தும் நபராக இருக்கின்றார். இப்படியான நிலையில் கனவினை எட்டும் நிலையில் அவருக்கு விபத்து ஏற்படவே வீட்டில் கூறிய பொய் வெளிவருகின்றது. இதனால் தடைபட்ட அவரது கனவினை எட்டும் முயற்சி இறுதியில் எப்படி வெல்கின்றார் என்பதுதான் படத்தின் க்ளைமேக்ஸாக இருக்கும் என படத்தின் ட்ரைலரைப் பார்க்கும்போது தெரிகின்றது. 


ட்ரைலரில், ’’புடுச்சத பண்ணா லட்சத்துல ஒருவர் மட்டும் இல்லை லட்சம்பேரும் சூப்பர் ஸ்டார் ஆகலாம்’’ எனக் பேசியுள்ள வசனம் ரசிகர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.