அன்னபூரணி அரசு அம்மா சர்சையில் சிக்கினாலும், சிக்கினார், அதிலிருந்து மீண்டு வர தனது இயற்கை ஒளி பவுண்டேசனின் பழைய வீடியோக்களை புதிதாக பதிவேற்றி, ‛எங்க குழந்தைகள் என்னை பற்றி என்ன சொல்றாங்க பாருங்க...’ என்பதைப் போல, திருப்தியடைந்து வருகிறார். அந்த வகையில், இன்றைய ஸ்பெஷல், அவரிடம் தீட்சை வாங்கியதாக கூறி, கோயம்புத்தூரசை் சேர்ந்த தம்பதி அம்மா முன்னிலையில் தரும் அனுபவ வாக்குமூலத்தை நீங்களே கேளுங்கள்...




‛‛2வது நாள் அம்மாவிடம் தீட்சை எடுத்தேன். 6 மாதங்கள் நான் இதை வீட்டில் கூறவில்லை. 6 மாத்திற்கு பின் ஒரு பெரிய பிரச்சனையில் என் மனைவி சென்றார். எல்லா முயற்சியும் செய்தும் பயனில்லை. இனி எந்த வழியும் இல்லை; இயற்கை ஒளியில் வந்து இணைந்துக்கோ என்று மனைவியிடம் கூறினேன். அவளும் இணைந்தாள். அதன் பின் நடந்ததைஇனி என் மனைவி அதை விவரிப்பார்...‛‛ என மைக்கை அவர் மனைவியிடம் வழங்கினார். அவர் அளித்த அற்புத அனுபவங்கள் இதோ...


‛‛தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு என் நிலை மாறியிருந்தது. ஏதாவது செய்து கொண்டால் குடும்பம் என்ன ஆகும் என்பதால், என்ன முடிவு எடுப்பது என குழப்பமாக இருப்பதாக என் கணவரிடம் கூறினேன். எது எனக்கு பிரச்சனையாக இருந்ததோ, அது வரமாக மாறிவிட்டது. அது இயற்கை ஒளியில் இணைந்த பின் நடந்தது. பெரிய மிராக்கிள் எனக்கு நடந்தது. இதற்கு அம்மாவுக்கு நான் எப்படி நன்றி கடன் செலுத்த போகிறேன் என்று தெரியவில்லை. அந்த அளவுக்கு என் உயிரை திருப்பிக் கொடுத்ததும் அவங்க தான்; என் வாழ்க்கையை திருப்பிக் கொடுத்ததும் அம்மா தான். என் மகளுக்கும் ஒரு பிரச்சனை வந்தது. எனக்கு அம்மாவிடம் சென்று தீட்சை எடுக்கலாம் என என் கணவரிடம் கூறினேன். என் கணவர் யோசித்தார். அப்புறம் அம்மாவிடம் வந்தோம், இப்போது அவளும் சரியாகி, பூரணமாக இருக்கிறாள். 




முழுமையான ஒரு வாழ்க்கைக்கு என் குடும்பம் திரும்பியிருக்கிறது. நாளை என்ன ஆகும் என்கிற எண்ணம் இப்போது சுத்தமாக இல்லை. முழுமையாக மகிழ்ச்சியான சூழலுக்கு திரும்பிவிட்டோம். தினம் தினம் மிராக்கிள் நடக்கிறது. எதை சொல்வது, எதை விடுவது என தெரியவில்லை. நன்றியை தவிர வேறு எதுவும் என்னிடம் இல்லை. ,’’ என மெய் உருகி அவர் வாக்குமூலம் தர, நாற்காலியில் அமர்ந்து, ஆசி வழங்கியபடி அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தார் அன்னபூரணி அரசு அம்மா.


இதோ அந்த வீடியோ...



 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண