ஆம், அண்ணாத்த திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 6 நாட்கள் ஆன நிலையில், இதுவரை படமானது 196.08 கோடி வசுல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது படம் வெளியான முதல் நாளில் 70.19 கோடியும், இராண்டாம் நாளில் 42.63 கோடியும், மூன்றாம் நாளில் 33.71 கோடியும், நான்காம் நாளில் 28.20 கோடியும், ஐந்தாம் நாளில் 11.85 கோடியும், ஆறாம் நாளில் 9.50 கோடியும் ஆக மொத்தம் 196.08 கோடி வசுல் செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. 










முன்னதாக, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் தீபாவளிக்கு  அண்ணாத்த படம் வெளியானது. சிறுத்தை சிவா இயக்கியிருந்த இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா, சூரி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. 




ரஜினி ரசிகர்கள் சில பேருக்கு இந்தப் படம் பிடித்திருந்தாலும் பெரும்பான்மையான மக்களுக்கு படம் பிடிக்க வில்லை என்பதை அண்ணாத்த படத்தின் முதல் காட்சி மக்கள் கருத்தில் தெரியவந்தது. படத்தின் கதையில் புதிதாக எதுவுமில்லை. சிவா தனது முந்தைய படமான விஸ்வாசத்திலிருந்து கொஞ்சம், திருப்பாச்சி திரைப்படத்திலிருந்து கொஞ்சம் எடுத்து கதையை உருவாக்கியிருக்கிறார். கீர்த்தி சுரேஷூக்கும், ரஜினிக்குமான பாசப் பிணைப்பு ஒர்க் அவுட் ஆக வில்லை போன்ற விமர்சனங்கள் எழுந்தன.  


இருப்பினும் தியேட்டருக்கு வரும் மக்களின் கூட்டம் என்னவோ குறையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். கொட்டும் மழையிலும் குடும்பம் குடும்பமாய் மக்கள் தியேட்டருக்கு வந்து கொண்டுதான் இருக்கின்றனர்.