தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டியை முத்துப்பாண்டி கைது செய்வது போன்ற காட்சியுடன் சீரியல் முடிவடைந்த நிலையில் இன்று நடக்க போவது  குறித்து பார்க்கலாம் வாங்க.


அதாவது, ஷண்முகம் தர்மகத்தா தேர்தலில் நின்று ஜெயித்து சௌந்தரபாண்டி செய்த திருட்டு வேலைகள் எல்லாம் வெளியே வர முத்துபாண்டியே அப்பாவை கைது செய்கிறான். இதை பார்த்த பாக்கியம் இவ்வளவு நாளா உன்கூட போய் குடும்பம் நடத்தினேன் பாரு என்று அவமானப்படுத்தி தாலியை கழட்டி முகத்தில் வீசி எறிய சொந்தரபாண்டி பதறி எழுந்து கொள்ள இது கனவு என தெரிய வருகிறது.


அதன்பிறகு சௌந்தரபாண்டி பக்கத்தில் படுத்திருந்த பாக்கியத்தின் தாலியை தொட்டு பார்க்க அவள் பதறி எழுந்து என்ன பண்றீங்க என்று கேட்க தாலி என்று சொல்ல பாக்கியம் தாலியை எதுக்கு அறுக்கறீங்க என்று கேள்வி கேட்க இவர் நான் அறுக்கல, நீ தான் கழட்டி தூக்கி எறிந்த என்று சொல்கிறார். ஷண்முகம் மட்டும் தர்மகத்தா தேர்தலில் நின்னு ஜெயிச்சிட்டா அவ்வளவு தான், ஒன்னு அவன் கிட்ட மன்னிப்பு கேட்கணும், இல்லனா தூக்குல தான் தொங்கணும். சண்முகத்தை எப்படியாது தேர்தலில் நிற்க விடாமல் தடுக்க வேண்டும் என்று சொல்கிறார்.


மேலும் சனியனை கூட்டிட்டு ஷண்முகம் வீட்டிற்கு வந்து பரணிக்கு போன் செய்து வெளியே வர சொல்கிறார். வெளியே வந்த பரணியிடம் எனக்கிட்ட இருப்பது இந்த தர்மகத்தா பதவி ஒன்னு தான், அதனால் சண்முகத்தை தர்மகத்தா தேர்தலில் நிற்க வேண்டாம்னு சொல்லுமா என்று கெஞ்ச பரணியும் சரி என்று சொல்லி விடுகிறாள். அதன் பிறகு வீட்டிற்கு வந்த பரணி தூங்கி கொண்டிருக்கும் சண்முகத்தை மயில் இறகை வைத்து வருட அவன் கண் விழித்து என்னாச்சு என்று கேட்கிறான்.


பரணி உன்கிட்ட ஒன்னு சொல்லணும் என்று சொன்னதும் ஷண்முகம் ஐ லவ் யூ-னு சொல்ல போற அதானே என்று கேட்க பரணி இல்லை நீ தர்மக்கத்தா தேர்தலில் நிற்க கூடாது என்று சொல்கிறாள். ஷண்முகம் ஓ இதுக்காக தான் சமையல் செய்து கொடுத்து கவனித்து கிட்டியா என்று திட்டி நான் தேர்தலில் கண்டிப்பா நிற்பேன் என்று சொல்லி விடுகிறான்.


அதனை தொடர்ந்து மறுநாள் பரணி கோலம் போட ஷண்முகம் குடை பிடிக்க அவள் அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை என கோபப்படுகிறாள். தொடர்ந்து பழையபடி அவனிடம் வெறுப்பை காட்ட வைகுண்டம் ஷண்முகத்திடம் என்னாச்சி என்று கேட்க பரணி ஒரு விஷயம் கேட்டா நான் முடியாதுனு சொல்லிட்டேன் என்று சொல்ல வைகுண்டம் அதை முழுதாக கேட்காமல் எதுவாக இருந்தாலும் என் மருமகளுக்காக செய்து கொடு என்று சொல்லி விடுகிறார்.


அதன் பிறகு பரணி ஷண்முகத்துடன் வண்டியில் இடைவெளி விட்டு உட்கார்ந்து செல்ல ஷண்முகம் பாட்டெல்லாம் வைத்து சமாதானம் செய்ய முயற்சி செய்ய போனை தூக்கி போட்டு விடுகிறாள். பிறகு தர்மகத்தா தேர்தலில் நிற்கவில்லை என்று சொன்னதும் சந்தோசப்பட்டு அவனை நெருங்கி வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.