தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் அஞ்சுகுரியன். கேரள மாநிலம் கோட்டயத்தில் பிறந்த இவர் தமிழில் வெளியான நேரம் படம் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். மலையாளம் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான பிரேமம் படத்திலும் அஞ்சு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பல்வேறு மலையாள படங்களில் நடித்துள்ள இவர் சில படங்களில் கதாநாயகியாக நடிக்க தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். இதற்காக தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதற்காக உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், அஞ்சுகுரியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், அஞ்சுகுரியன் குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபடுகிறார். மேலும், தனது குத்துச்சண்டை பயிற்சியாளர் கையில் உள்ள தடுப்பில் ஆவேசமாக குத்துக்களை அஞ்சுகுரியன் விடுகிறார், அஞ்சுகுரியன் பதிவிட்ட இந்த வீடியோவிற்கு பலரும் லைக் செய்து, அவரை பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.
2013ம் ஆண்டு முதல் நடித்து வரும் அஞ்சுகுரியன் ஓம்சாந்தி ஓசன்னா, 2 பெண்குட்டிகள், கவி உத்தெசிசத்து ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடந்த 2107ம் ஆண்டு வெளியான சென்னை டூ சிங்கப்பூர் படம் மூலமாக கதாநாயகியாக திரையுலகில் முன்னேறினார். பின்னர், ஞான் பிரகாசன் என்ற மலையளப் படத்தில் நடித்தார். தெலுங்கில் இடம்ஜகத் என்ற படத்தில் நடித்துள்ளார். தமிழில் ஜூலை காற்றிலும், இக்ளூ படத்தில் நாயகியாகவும் நடித்துள்ளார். பின்னர் மலையாளத்தில் ஜீபூம்பா, சிபு, ஜேக் அண்ட் டேனியல், மேப்படியான் படங்களிலும் நடித்துள்ளார். வளர்ந்து வரும் நடிகையான அஞ்சுகுரியன் சில குறும்படங்களிலும், ஆல்பங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்