Kanguva Update : சூர்யாவுடன் மோதப்போகும் அனிமல் பட வில்லன்... கங்குவா படத்தில் நடிக்கும் பாபி தியோல்

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா படத்தில் பாபி தியோ நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது

Continues below advertisement

கங்குவா

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் கங்குவா.இந்த படத்தின் மூலம் ஹீரோயினாக பாலிவுட் நடிகை திஷா பதானி தமிழில் அறிமுகமாகிறார். மேலும் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா உள்ளிட்ட பலரும் கங்குவா படத்தில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்திற்கு  வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்கிறார். 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் கங்குவா படத்தில் சூர்யா 13 விதமான தோற்றங்களில் நடிக்கிறார். 

Continues below advertisement

கங்குவா இதுவரை

கங்குவா என்கிற வார்த்தைக்கு என்றால் நெருப்பு சக்தி கொண்டவர் மற்றும் மிகவும் வீரம் கொண்டவர் என்பது பொருள்.  நிஜ வரலாற்றுக் கதையை சாராமல் முழுக்க முழுக்க கற்பனை கதை கங்குவா என்று படக்குழு குறிப்பிட்டுள்ளது.  முன்னதாக நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு கங்குவா படத்தின் முன்னோட்ட வீடியோ ஒன்று வெளியிடப் பட்டது. இதனைத் தொட்ர்ந்து படப்பிடிப்பு தளத்தில் ஒரு சிறிய விவத்து ஏற்பட்டதால் நடிகர் சூர்யா காயமடைந்தார். தற்போது மீண்டும் படப்பிடிப்பு முழுவிச்சில் தொடங்கியுள்ளது.

சூர்யாவுடம் பாபி தியோல்

சமீபத்தில் இந்தியில் ரன்பீர் கபூர் நடித்த அனிமல் திரைப்படம் வெளியாகியது . பாக்ஸ் ஆஃபிஸில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் இந்தப் படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு வில்லனாக கம்பேக் கொடுத்தார் நடிகர் பாபி தியோல். சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் எதிர்பார்க்காத விதமாக பாபி தியோலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பாபி தியோ தான் சூர்யாவின் கங்குவா படத்தில் நடிப்பதாக கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

பாபி தியோல் : “ சூர்யாவுடன் கங்குவா படத்தில் நான் நடிக்கிறேன். இந்தப் படத்தின் இயக்குநர் சிவா ஒரு இனிமையான மனிதர். மேலும் சூர்யா ஒரு சிறந்த நடிகர். இந்தப் படத்தில் நான் நடிக்கும் கதாபாத்திரம் மிக சவாலானது. என்னுடைய செளகரியங்களை விட்டு சவால்களை எடுத்துக்கொள்வது எனக்கு பிடிக்கும் . எனக்கு தமிழ் மொழியும் தெரியாது ஒரு சில மாதங்களில் என்னால் அந்த மொழியை கற்க முடியாது. இதனால் இந்தப் படத்தில் நடிப்பது எனக்கு இன்னும் சவாலான ஒரு அனுபவமாக இருக்கும் . “ என்று அவர் தெரிவித்தார்.

புறநாநூறு

கங்குவா படத்தைத் தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடிக்கிறார் சூர்யா. துல்கர் சல்மான் , நஸ்ரியா நஸிம் , விஜய் வர்மா உள்ளிட்டவர்கள்  நடிக்கும் இந்தப் படத்திற்கு ஜி. வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 

Continues below advertisement
Sponsored Links by Taboola