உனக்கென வேணும் சொல்லு... என தல அஜித்தை உருகி உருகி 'என்னை அறிந்தால்'  படத்தில் பாட வைத்த பேபி அனிகா இன்று ஒரு ஹீரோயினாக கிடுகிடுவென வளர்ந்து நிற்கிறார். குழந்தை நட்சத்திரமாக மிகவும் பிரபலமாக இருந்த அனிகா சுரேந்திரன் இன்று தனது 19வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 


 



அஜித் ரீல் மகள் :


'என்னை அறிந்தால்' மற்றும் 'விஸ்வாசம்' படத்தில் அப்பா - மகள் கெமிஸ்ட்ரி மிகவும் பக்காவாக அஜித் - அனிகாவுக்கு பொருத்தமாக அமைந்தது. அவர்களின் பாசம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால் அஜித்தின் ரீல் மகள் என இணையத்தில் அழைக்கப்பட்டார். அதே போல நயன்தாரா மகளாக நடித்ததால் 'குட்டி நயன்' என்றும் அடையாளம் காணப்பட்டார் அனிகா சுரேந்திரன். ஜெயம் ரவியின் தங்கையாக மிருதன், நானும் ரவுடி தான் படத்தில் குழந்தை நாயனாக நடித்து இருந்தாலும் 'விஸ்வாசம்' படம் மிகப்பெரிய டர்னிங் பாயிண்டாக அமைந்த படம். இப்படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது பெற்றுள்ளார். 


ஹீரோயினாக அறிமுகம் :


மலையாளத்தில் வெளியான 'கப்பேலா' திரைப்படத்தின் தெலுங்கு ரீ மேக் படமான புட்ட பொம்மா படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து 'ஓ மை டார்லிங்' என்ற மலையாள படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து ஏராளமான படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். 


 



தனுஷ் படத்தில் அனிகா :


தனுஷ் நடிக்கும் D50 படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அப்படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் துஷாராவின் தங்கையாக அனிகா நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. 







குவியும் வாழ்த்து :


சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் அனிகா அவ்வப்போது தாராளம் காட்டி புகைப்படங்களை போஸ்ட் செய்து ரசிகர்களை மூச்சடைக்க வைத்து எளிதில் கவனம் ஈர்த்து வருகிறார். தனது 19வது பிறந்தநாளை கொண்டாடும் அனிகாவுக்கு திரை பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.