பின்னணி பாடகி மற்றும் நடிகை ஆண்ட்ரியா அவரது இன்ஸ்டா பக்கத்தில் தனது சகோதரியின் திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
பச்சைக்கிளி முத்துசரம் படத்தின் மூலம் தனது சினிமா வாழ்கையை துவங்கினார் ஆண்ட்ரியா. இவர் குரலுக்கு பல ரசிகர்கள் உண்டு. சில பாடல்கள் எல்லாம் ஆண்ட்ரியாதான் பாடினாரா என்றே தெரியாது . அந்த அளவுக்கு அவரின் குரலை மாற்றி மாற்றி பாடும் திறமையை பெற்றவர்.
சமீபமாக புஷ்பா படத்தில் இவர் பாடிய ஓ சொல்றியா மாமா பாடல் செம ஹிட்டானது. மற்ற மொழியில் அந்த பாடல்கள் வெளியாகினாலும் தமிழில் இவர் பாடிய அந்த குரலுக்காக பலரும் கேட்டு ரசித்தனர். ஒருபக்கம் இசை வெள்ளத்தில் மக்களை தத்தளிக்கவைத்தாலும், இவர் நடிப்பையும் ஒரு கை பார்த்துவிட்டார் என்றே சொல்லலாம்.
வட சென்னையில் இவர் நடித்த சந்திரா கதாப்பாத்திரம் பலரால் பேசப்பட்டது. அடிக்கடி இவர் பல கான்சர்ட்களிலும் கலந்து பாடி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அசத்தினார்.
இவர் அவ்வப்போது வெளிநாடு பயணங்கள் செய்வதும் உண்டு. அந்த அழகான புகைப்படங்களை இன்ஸ்டாவில் அடிக்கடி பதிவிடுவர். இப்போது அவர் தங்கைக்கு திருமணம் நடந்து முடிந்த நிலையில், சில திருமண போட்டோஸ்களை ஷேர் செய்துள்ளார்.இப்படத்தின் கேப்ஷனில் “எனது இளைய சகோதரிக்கு திருமணம் ஆகியுள்ளது. நாடிய மற்றும் செட்ரிக்கு வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.அவரின் தங்கை நாடிய செட்ரிக் என்ற வெளிநாட்டவரை மணந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது