கவின் நடித்துள்ள மாஸ்க் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ளார் நடிகை ஆன்ட்ரியா. இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்திலும் அவர் நடித்துள்ளார். ஆன்ட்ரியா நடிப்பில் பிசாசு 2 , மனுஷி ஆகிய படங்கள் வெளியாக தயார் நிலையில் உள்ளன. மிஸ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 படத்தில் நிர்வாண காட்சி குறித்து நடிகை ஆன்ட்ரியா தற்போது விளக்கமாக பேசியுள்ளார்

Continues below advertisement

பிசாசு 2

பாலா தயாரிப்பில் வெளியான பிசாசு 1 பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து இயக்குநர் மிஷ்கின் பிசாசு பாகம் 2 பட வேலைகளில் இறங்கினார். முக்கிய கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்க, அவருடன் பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார்.

நிர்வாண காட்சி

இப்படத்தில் ஆன்ட்ரியா 15 நிமிடம் நிர்வாணமாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. படத்தின் கதை பிடித்திருந்ததால் ஆன்ட்ரியா இப்படத்தில் நடிக்க சம்மதித்திருந்தார். இதற்காக பெண் புகைப்பட கலைஞர் ஒருவரை வைத்து ஃபோட்டோஷூட் நடத்தியதாகவும் பின் இளைஞர்கள் இந்த காட்சியை தவறாக புரிந்துகொள்வார்கள் என்று இந்த காட்சியை தான் நீக்கிவிட்டதாக இயக்குநர் மிஸ்கின் தெரிவித்தார்.  படப்பிடிப்பு முடிந்து ரிலீஸூக்கு தயாராக இருக்கும் பிசாசு 2 திரைப்படம் நிதி பிரச்சனைகளால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 

Continues below advertisement

ஆன்ட்ரியா விளக்கம்

அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் பிசாசு படத்தில் நிர்வாண காட்சி குறித்து ஆன்ட்ரியா வெளிப்படையாக பேசினார். " மிஸ்கின் சார் ஒரு முழு படத்தை ஒரு பெண்ணை வைத்து எழுதுகிறார். அவர் ஒன்னும் புது பட இயக்குநர் கிடையாது. ஏற்கனவே நிறைய பெரிய நடிகர்களோடு பணியாற்றி இருக்கிறார். வேற வழியில்லாமல் அவர் இந்த படத்தை பண்ணவில்லை. தெளிவாக தன்னுடைய சொந்த தெரிவில் இருந்து இந்த படத்தை அவர் எடுக்கிறார்.  பிசாசு 2 திரைக்கதையில் நிர்வாண காட்சிகள் இருந்தன. ஆனால் மிஷ்கின் அந்த காட்சிகளை எடுக்கவில்லை. படத்தில் நிர்வாண காட்சிகள் இல்லை ஆனால் ஆபாச காட்சிகள் இருக்கின்றன. அவரைப் போன்ற ஒரு முதிர்ந்த இயக்குநர் அப்படி ஒரு கதாபாத்திரத்தில் என்னை நடிக்க சொன்னால் நான் அவரை நம்பிதான் ஆக வேண்டும். நிறைய பேர் என்னை ஸ்கர்ட் கொஞ்சம் கீழ இறக்கிவிட சொல்லிருக்காங்க. ஆடை அணிந்திருக்கோம் ஆனால் பார்வை தப்பாதான் இருக்கு " என ஆன்ட்ரியா தெரிவித்துள்ளார்.