Andhagan and Minmini Twitter review : பிரஷாந்த் கலக்கிட்டாரா? மின்மினி எப்படி இருக்கு? மக்களின் ட்விட்டர் ரீவ்யூ பார்க்கலாம் வாங்க 

இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள' அந்தகன்' மற்றும் மின்மினி படத்தின் ட்விட்டர் ரிவியூ.

Continues below advertisement

'அந்தகன்' ட்விட்டர் ரிவ்யூ: 

தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார் பிரஷாந்த் நடிப்பில் நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்த  மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் 'அந்தகன்'. தியாகராஜன் இயக்கி தயாரித்துள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ரவி யாதவ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்தில் சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, வனிதா விஜயகுமார், பூவையார், யோகி பாபு, கார்த்திக் மற்றும் பலர் நடித்துள்ளனர். இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள இப்படம் தொடர்பாக ரசிகர்கள் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ள கருத்துக்களை பார்க்கலாம்:  

Continues below advertisement

 

 

மின்மினி ட்விட்டர் ரீவ்வியூ :  

சில்லுக்கருப்பட்டி, ஏலே உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றவர் ஹலிதா ஷமீம். அவரின் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் 'மின்மினி'. 
 
கதாபாத்திரங்கள் யதார்த்த காலகட்டமான குழந்தை பருவம், பள்ளி பருவம், வேலைக்கு செல்லும் பருவம் என மூன்று காலகட்டத்தை தத்ரூபமாக காட்சிப்படுத்த வேண்டும் என்பதற்காக 8 ஆண்டுகள் காத்திருந்து புது முயற்சியாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் மூத்த மகள் கதீஜா ரஹ்மான் தான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். திரையரங்கில் இன்று வெளியான இப்படம் குறித்து ரசிகர்கள் அவர்களின் கருத்துக்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அவற்றில் சில :
 
 
 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola