'ஜமா' இயக்குநர் பாரி இளவழகன் இயக்கி நடித்துள்ள 'அன்பே டயானா' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம், வரும் ஜூலை 17, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர், நடிகர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு படத்தின் உருவாக்க அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

Continues below advertisement

பெரம்பூரை மையமாகக் கொண்ட காதல் கதை

இயக்குநர் பாரி இளவழகன், 'ஜமா' படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்கியுள்ள இந்தப் படம், சென்னை பெரம்பூரை பின்னணியாகக் கொண்ட கிராஸ்-கல்ச்சுரல் காதல் கதையாக உருவாகியுள்ளது. வெவ்வேறு கலாச்சாரப் பின்னணியைச் சேர்ந்த இருவரின் காதலையும், குடும்ப உறவுகளையும், உணர்வுகளையும் மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

"பெரம்பூரை புதிதாக பார்க்க வைத்தார்" – பரத் சங்கர்

இசையமைப்பாளர் பரத் சங்கர் பேசும்போது, "பாரி இளவழகன் கதை சொல்லிய விதமே என்னை மிகவும் கவர்ந்தது. பெரம்பூரை இதுவரை நான் அறியாத ஒரு உலகமாக அவர் விவரித்தார். அதனால் படப்பிடிப்புக்கு முன்பே பல முறை பெரம்பூருக்கு சென்று அந்த இடங்களை நேரில் பார்த்தேன். இந்தப் படத்தின் இசையும் பின்னணி இசையும் ரசிகர்களுக்கு மனநிறைவை தரும்" என்றார்.

Continues below advertisement

"படம் ரசிகர்களை ஏமாற்றாது" – பாரி இளவழகன்

இயக்குநரும், கதாநாயகனுமான பாரி இளவழகன், இந்தப் படத்திற்கு முழு சுதந்திரம் வழங்கிய தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்தார். படத்தில் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் அர்ப்பணிப்பே இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் என்றும், பெரம்பூர் மக்களும் குடும்ப ரசிகர்களும் கொண்டாடும் படமாக 'அன்பே டயானா' இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஜூலை 17-ல் திரையரங்குகளில்

'நீக்' திரைப்படம் மூலம் கவனம் பெற்ற ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தில், நடிகை ரோஜா, சேத்தன், பரிதாபங்கள் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பரத் சங்கர் இசையமைத்துள்ள இப்படம், காதல், குடும்பம் மற்றும் நகைச்சுவையை இணைக்கும் முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக ஜூலை 17-ஆம் தேதி வெளியாகிறது.