Hero VIDA VX2 Plus Electric Scooter: ஹீரோ விடா விஎக்ஸ்2 ப்ளஸ் மின்சார ஸ்கூட்டரில், 4.4KWh பேட்டரியை கொண்ட எடிஷனின் விலை ரூ.1.44 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

ஹீரோ விடா VX2 ப்ளஸ்  - புதிய 4.4KWh வேரியண்ட்

விடா விஎக்ஸ்2 ப்ளஸ் மின்சார ஸ்கூட்டரில் 4.4KWh பேட்டரியுடன் கூடிய புதிய எடிஷனை அறிமுகப்படுத்தி, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது மின்சார வாகனத்தின் போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்தியுள்ளது. VX2 ஸ்கூட்டர்களின் புதிய ஃப்ளாக்‌ஷீப் வேரியண்டாக நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டரானது, பெரிய அகற்றக்கூடிய பேட்டரி பேக்கை கொண்டுள்ளது. இது ஏற்கனவே உள்ள 3.4KWh பேட்டரி பேக் ஆப்ஷனை காட்டிலும் கூடுதல் ரேஞ்ச் மற்றும் செயல்திறனை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  விடா விஎக்ஸ்2 ப்ளஸ் 4.4KWh வேரியண்டின் விலையானது ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 990 ரூபாயாக (எக்ஸ் - ஷோரூம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், ஜுலை மாத இறுதியில் இருந்து விநியோகம் தொடங்க உள்ளது.

Continues below advertisement

ஹீரோ விடா VX2 ப்ளஸ் 4.4KWh - முக்கிய விவரங்கள்

அம்சங்கள்விடா விஎக்ஸ்2 ப்ளஸ் 4.4KWh வேரியண்ட்
எக்ஸ் - ஷோரூம் விலைரூ.1,43,990
பேட்டரி4.4KWh
பேட்டரி கான்ஃபிகரேஷன்இரண்டு அகற்றக்கூடிய 2.2KWh பேட்டரிகள்
சான்றளிக்கப்பட்ட ரேஞ்ச்187கி.மீ.,
நிஜ உலக எதிர்பார்ப்பு ரேஞ்ச்140கி.மீ.,
அதிகப்படியான மோட்டார் அவுட்புட்6KW
அதிகப்படியான டார்க்26Nm
அதிகப்படியான வேகம்மணிக்கு 90கி.மீ.,
0-40KM/h ஆக்சிலரேஷன்3.1 விநாடிகள்
ரைடிங் மோட்கள்எகோ, ரைட், ஸ்போர்ட்
இருக்கைக்கு கீழே ஸ்டோரேஜ்27.2 லிட்டர்
வாகனத்தின் மொத்த எடை120 கிலோ
டிஸ்பிளே4.3 இன்ச் டிஎஃப்டி
ப்ரேக்கிங்முன்புறம் டிஸ்க், பின்புறம் சிபிஎஸ் உடன் கூடிய ட்ரம்
டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் நேரம்65 நிமிடங்களில் பூஜ்ஜியத்திலிருந்து 80% 

ஹீரோ விடா VX2 ப்ளஸ் - 3 பேட்டரி ஆப்ஷன்கள்

இந்திய சந்தையில் விடா விஎக்ஸ்2 ப்ளஸ் மின்சார ஸ்கூட்டர்களானது தற்போது 3 பேட்டரி வேரியண்ட்களில் கிடைக்கிறது. அவை முறையே 2.2KWh, 3.4KWh மற்றும் 4.4KWh ஆகும். இவற்றின் சான்றளிக்கப்பட்ட ரேஞ்ச் 93 கிலோ மீட்டரில் தொடங்கி 187 கிலோ மீட்டர் தூரம் வரை நீள்கிறது. அதிகபட்சம் வேகம் மணிக்கு 70 கிலோ மீட்டரில் தொடங்கி 90 கிலோ மீட்டர் வரை நீள்கிறது.

இதையும் படியுங்கள்: Tata Tiago: பட்ஜெட்டில் பாதுகாப்பான EV கார் - 285KM ரேஞ்ச், 4 ஸ்டார் ரேட்டிங் - ரூ.4500 போதும், EMI விவரங்கள்

ஹீரோ விடா VX2 ப்ளஸ் - அம்சங்கள், வசதிகள்

இந்த ஸ்கூட்டரில் முழுமையான LED விளக்குகள்,  ஸ்டெப் பை ஸ்டெப் நேவிகேஷன், ஸ்மார்ட்போன் கனெக்ட். ஓவர் தி ஏர் அப்டேட்கள்,  ரிவர்ஸ் மற்றும் பார்க் மோட்கள், ரிஜெனரேட்டிவ் ப்ரேக்கிங்,  இருவழி த்ராட்டில் ஃபங்க்சனாலிட்டி,  ஒருங்கிணைந்த ப்ரேக்கிங் சிஸ்டம்,  முன் டிஸ்க் மற்றும் பின் டிரம் பிரேக்குகள், 12 இன்ச் அலாய் வீல்கள்,  இருக்கைக்கு அடியில் 27.2 லிட்டர் சேமிப்பு இடம், 4.8-லிட்டர் முன்புற சேமிப்புப் பகுதி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.  மேலும் மேட் க்லாலோ லைம், நெக்சஸ் ப்ளூ, மேட் இன்ஸ்பைர்ட் ஒய்ட், பெர்ல் ரெட், பெர்ல் ப்ளாக், ஆடம் ஆரஞ்சு மற்றும் மெடாலிக் மேட் கன் மெடல் க்ரே ஆகிய 7 வண்ண விருப்பங்களில் ஒன்றை பயனர்கள் தேர்வு செய்துகொள்ளலாம்.


Car loan Information:

Calculate Car Loan EMI