ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சண்ட் திருமணம்


ரிலையன்ஸ் குழுமத்தின் உரிமையாளர் முகேஷ் மற்றும் நிதா அம்பானி தம்பதியின் இளை மகனான ஆனந்த் அம்பானி மற்றும் தொழிலதிபரின் மகள் ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் வரும் ஜூலை 12ஆம் தேதி அதி பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இந்தத் திருமணத்திற்கு முன்னதாக கடந்த மார்ச் மாதம் முதல் பல்வேறு கட்டங்களாக கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த மார்ச் மாதம் 1ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை குஜராத் ஜாம் நகரில் மிக உலகத்தில் பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்ட பிரமாண்ட கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் திரைப் பிரபலங்கள் முதல் அரசியல் பிரபலங்கள், உலகின் பணக்கார பிரமுகர்கள் வரை அனைவரும் கலந்துகொண்டார்கள். 

Continues below advertisement


இதனைத் தொடர்ந்து கடந்த மே 29ஆம் தேதி இத்தாலி முதல் பிரான்ஸ் வரை சொகுசு கப்பலில் திருமண கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இந்த ஒட்டுமொத்த நிகழ்வுக்கு ரூ.7,500 கோடி செலவிட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல பாடகர்களாகன ஷகிரா மற்றும் கேடி பெர்ரி உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். 


மும்பை வந்திறங்கிய ஜஸ்டின் பீபர்!


திருமண நாள் நெருங்கி வரும் நிலையில் மேலும் பல்வேறு கொண்டாட்ட நிகழ்வுகளை அம்பானி குடும்பம் ஒருங்கிணைத்துள்ளது. கடந்த ஜூலை 2ஆம் தேதி 50 ஏழை தம்பதிகளுக்கு மகாராச்ஷ்ரா மாநிலத்தில் இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது. மேலும், மணமக்களுக்கு தங்கத்தில் தாலி, மூக்குத்தி மற்றும் வெள்ளி மெட்டி உள்ளிட்டவை பரிசாக வழங்கப் பட்டன. 


தற்போது மும்பையில் உள்ள அம்பானியின் வீடான ஆண்டிலியாவில் திருமணத்திற்கு முந்தைய பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இதன்படி மமேரு என்று சொல்லப்படும் குஜராத்தியர்களின் பாரம்பரிய நிகழ்ச்சி நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மணமக்கள் வீட்டார் ஒருவருக்கு ஒருவர் இனிப்புகளையும் புத்தாடைகளையும் தங்க நகைகளையும் பரிசாக வழங்கிக் கொண்டாடினார்கள். 


வரும் ஜூலை 5ஆம் தேதி சங்கீத் நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பாடுவதற்காக பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் வரவழைக்கப்பட்டிருக்கிறார். ஜஸ்டின் பீபர் இன்று மும்பை அம்பானி இல்லத்திற்கு வந்து சேர்ந்துள்ளார். இந்த நிகழ்வில் பாடுவதற்காக அவருக்கு 83 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக பாப் பாடகர்கள் ரிஹானா, ஏகான், ஷகிரா, கேட்டி பெர்ரி ஆகியவர்கள் அம்பானி வீட்டு திருமண கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட நிலையில் தற்போது ஜஸ்டின் பீபர், லானா டெல் ரே உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.