ஏ.எல். விஜய் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான 'மதராசபட்டினம்' திரைப்படம் மூலம் இந்திய சினிமாவில் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். அறிமுகமான முதல் படத்திலேயே அட்டகாசமான வரவேற்பு கிடைத்ததால் இந்தி, தெலுங்கு திரைப்படங்களிலும் வாய்ப்புகள் குவிந்தன. 



எமி தனது மகனுடன்


 


இந்திய சினிமாவில் அறிமுகம் :


தென்னிந்திய சினிமாவில் அடியெடுத்து வைத்த குறுகிய காலத்திலேயே முன்னணி திரை நட்சத்திரங்களான விக்ரம், ரஜினிகாந்த், தனுஷ், விஜய் உள்ளிட்ட நடிகர்களின் ஜோடியாக நடிக்கும் வாய்ப்புகள் அமைந்தன. இப்படி பிஸியாக நடித்து வந்த சமயத்தில் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட  போவதாக கூறி நிச்சயதார்த்தம் செய்து கொண்ட பின்னர் திரைப்படங்களில் நடிக்காமல் ஒதுங்கினார். அதற்கு முன்னர் எமி ஜாக்சன் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த படம் 2.0 படம் வெளியானது. பின்னர் திருமணம் செய்து கொள்ளாமலேயே காதலர் ஜார்ஜ் மற்றும் எமி ஜாக்சன் இருவரும் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர் முதல் கணவர் ஜார்ஜ் மூலம் எமி ஐசக்சனுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் மகன் பெயர் ஆண்ட்ரியாஸ். எமி தனது மகனை மிகவும் செல்லமாகவும் பாசமாகவும் வளர்த்து வருகிறார். அவ்வப்போது சோசியல் மீடியாவில் தனது மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து கொள்வது வழக்கம். 


எமி ஜாக்சன் ரீ என்ட்ரி :


அந்த வகையில் தற்போது மகன் ஆண்ட்ரியாஸ் உடன் எமி ஜாக்சன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இது சோசியல் மீடியாவில் லைக்ஸ்களை குவித்து வருகிறது. மீண்டும் சினிமாவில் நடிக்க போவதாக எமி ஜாக்சன் அறிவித்ததை தொடர்ந்து அவரை அறிமுகப்படுத்திய இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அச்சம் என்பது இல்லையே' திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய் ஜோடியாக ரீ - என்ட்ரி கொடுத்தார். அப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதுமாக முடிவடைந்த பின்னரும் இன்னும் அதன் ரிலீஸ் குறித்த தகவல் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை. கிடப்பில் போடப்பட்டுள்ள அப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.