தனது காதலான எட் வெஸ்ட்டின் பிறந்தநாளன்று தனது காதலனுக்கு மனம் உருகி காதல் வரிகளை சமர்ப்பித்துள்ளார் நடிகை எமி ஜாக்சன்.
திருமணம்வரை சென்று முடிந்த முதல் காதல்
மதராசப்பட்டினம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். தனது க்யூட்டான நடிப்பால் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார். தமிழ் சினிமாவில் தனக்கென தனித்துவமான இடத்தை பிடித்து வந்த எமி கடந்த 2019 ஆம் ஆண்டு தான் காதலித்து வந்த ஜார்ஜ் என்பவருடன் நிச்சயம் செய்துகொண்டார். இருவரும் திருமணம் செய்துகொள்ள இருந்த சமயத்தில் இந்த ஜோடிக்கு அதே ஆண்டின் இருதியில் ஆண் குழந்தை பிறந்தது. இதனைத் தொடர்ந்து எமி மற்றும் ஜார்ஜ் தங்களது உறவை முடித்துக்கொண்டார்கள். இருவரின் பிரிவு தொடர்பான எந்த வித தெளிவான காரணமும் தெரிவிக்கப்படவில்லை.
மீண்டும் காதல்வயப்பட்ட எமி
சில காலத்திற்கு பிறகு எமி ஜாக்சன் புகழ்பெற்ற ஹாலிவுட் தொலைக்காட்சி நடிகரான எட் வெஸ்ட் விக் என்பவரை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து எமி ஜாக்சன் மீது பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வைக்கப்பட்டன. ஆனால் எந்த காரணத்திற்காகவும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை மறைத்துவைக்கவில்லை எமி ஜாக்சன்.
அன்புக் காதலனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து
தற்போது தனது காதலனின் பிறந்தநாளன்று இருவரும் முத்தமிட்டுக்கொள்ளும் புகைப்படங்களைப் பகிர்ந்து மிக உருக்கமான பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் எமி ஜாக்சன். ”என் ஆருயிர் காதலனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீ என் வாழ்க்கையில் இருப்பதற்காக நான் ஒவ்வொரு நாளும் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். உனக்கு தெரியவில்லை என்றால் நான் உன்னை நேசிப்பதற்கான காரணங்களை சொல்கிறேன் கனிவான ஒருவனாக இருப்பதை மிக எளிமையாக செய்யக்கூடியவன் நீ. அழ மட்டுமே என் மனம் நினைத்தபோது என்னை சிரிக்க வைப்பதற்காக , உன்னுடைய அழகான தாடை எலும்பு அமைப்பிற்காக, உன்னுடைய தொடர்ச்சியான அன்பு மற்றும் ஆதரவிற்காக நான் உன்னை நேசிக்கிறேன். ஐ லவ் யூ மூன் மேன்.” என்று தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார் எமி ஜாக்சன்.