2010ம் ஆண்டு இயக்குநர் விஜயின் மதராசப்பட்டினம் திரைப்படம் மூலமாக இந்தியத் திரைப்பட உலகத்தில் நுழைந்தார் எமி ஜாக்சன். தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் ஒரு ரவுண்ட் வந்த எமி எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0ல் அக்ஷய் குமார், ரஜினி காந்த் ஆகியோருடன் நடித்தார். அந்தப் படத்தில் ரோபோவாக நடித்த எமி, கடைசியாக நடித்த படமும் அதுதான். அதன் பிறகு ஜார்ஜ் பனையீட்டூ என்பவருடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். பின்னர் அதே தொழிலதிபருடன் நிச்சயம் செய்யப்பட்டதாக அறிவிப்பை வெளியிட்டார்.
பின்னர் ஏமி கர்ப்பமாக இருந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கும் ஆண்டனி ஜாக்சன் பனையீட்டூ எனப் பெயரிட்டனர். இதற்கிடையே எமி, ஜார்ஜ் உடனான தனது இன்ஸ்டாகிராம் படங்கள் அத்தனையையும் நீக்கினார். ஏமியும் ஜார்ஜும் பிரிந்ததாக செய்திகள் வெளியானது. இதையடுத்து தனது மகனுடனான படங்களை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார் எமி.
இந்நிலையில் தற்போது தன் செல்ல மகனுடன் வண்ணத்துப்பூச்சியை கொஞ்சி மகிழும் வீடியோவை பதிவிட்டுள்ளார் எமி. தன்னுடைய இடுப்பில் சரிவர அமராமல் நழுவி ஓடும் மகனை மீண்டும் தூக்கி அமர வைக்கிறார் எமி. இந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து க்யூட் வீடியோ என பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கிடையே எமி பிரபல நடிகர் எட் வெஸ்ட்விக்குடன் காதலில் இருப்பதாக கூறப்பட்டது. 'Gossip Girl' நடிகரான வெஸ்ட்விக்குடன் தற்போது நேரம் செலவிட்டு வருவதாகவும், திரைப்பட விழாக்களிலும், பொது இடங்களிலும் இந்த ஜோடியை அடிக்கடி காண முடிவதாகவும் கூறப்பட்டது. பாலிவுட் நடிகரான எட் வெஸ்ட்விக் 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை தென் ஆப்பிரிக்க நடிகை தமராவுடன் உறவில் இருந்தார். பின்னர் இருவரும் பிரிந்தனர்.