அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் அமுதா அன்னலட்சுமிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 


விறுவிறுப்பாக செல்லும் சீரியல் 


தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில், திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இதில் அமுதாவாக கண்மணி மனோகரனும், அன்னலட்சுமியாக ராஜஸ்ரீயும் நடிக்கின்றனர்.


தன் அம்மாவின் கனவுக்காக வாத்தியார் வேலை செய்வதாக சொல்லி, பக்கத்து ஊரில் உள்ள பள்ளியில் பியூனாக இருக்கும் செந்திலை வாத்தியார் என நினைத்து காதல் கொள்கிறார் அமுதா. அந்தக்காதல் திருமணம் வரை சென்ற நிலையில், செந்திலை பற்றிய உண்மை தெரிய வருகிறது. இதன் பிறகு இந்த சீரியலில் என்ன நடக்கப்போகிறது என்பது விறுவிறுப்பாக செல்வதால், ரசிகர்களின் ஃபேவரைட் சீரியலாக அமுதாவும் அன்னலட்சுமியும் உள்ளது.  


முன்னதாக கோயிலில் செந்தில் அவமானப்பட்டு நிற்பதை கண்ட அமுதா, கோபத்துடன் வந்து சிதம்பரத்திடம் செந்திலுக்காக சப்போர்ட் பண்ணி கோபமாக பேசுகிறார். பின்னர் வீட்டில்  மாணிக்கம், செந்தில் இருவரும் அப்பாவின் நினைவு தினத்தை அன்னத்த நினைவூட்டுகின்றனர். ஆனால் அன்னம் செந்தில் எந்த காரியத்தையும் செய்ய கூடாது என சொல்கிறாள். மேலும் அன்னம், தன் கணவன் கதிரேசன் கதையை சொல்ல அமுதா என்ன பண்ணலாம் என யோசனை செய்கிறாள்.






பிறகு அமுதா கதிரேசன் வேலை பார்த்த பள்ளிக் கூடத்திற்கு சென்று அவருக்கு நினைவிடம் அமைக்க சொல்கிறாள். அங்கிருக்கும் ஆசிரியர் பழனிக்கு போன் செய்து விவரத்தை சொல்கிறார். உடனே பழனி இதனை தடுக்க திட்டம் போடுகிறான். இதற்கிடையில் கதிரேசனுக்கு காரியம் செய்ய வீட்டிலிருந்து அமுதாவும் அன்னலட்சுமியும் கிளம்ப காரை அமுதா பள்ளிக்கு போக சொல்கிறார். 


என்ன நடக்கிறது என புரியாமல் பள்ளிக்கு செல்லும் அன்னலட்சுமியை அங்கு அனைவரும் வரவேற்கின்றனர். பிறகு அன்னலட்சுமி கதிரேசன் புகைப்படத்தை திறந்து வைக்கிறாள். இதனையடுத்து அன்னம் நெகிழ்ச்சியாக பள்ளியில் பேசுகிறாள். அப்போது அன்னத்திற்கு பள்ளிக்கூடம் சார்பாக நினைவு பரிசு வழங்கப்படவிருக்கும் நிலையில் செந்தில் பிராடுத்தனம் செய்தார் என்கிற பிரச்சனை எழுகிறது. இதனால் கதிரேசனின் போட்டோவை பழனி ஆட்கள் அடித்து உடைக்கும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.