தமிழ் சினிமாவில் ஒரு துணை நடிகையாக பிரபலமானவர் நடிகை அம்மு அபிராமி. பைரவா படத்தில் ஒரு சில காட்சிகளில் வந்து போனவருக்கு அசுரன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது அவரின் திரைப்பயணத்தில் மிக முக்கியமா திருப்புமுனையை ஏற்படுத்தியது.


அம்மு அபிராமி


ராட்சன், யானை, தண்டட்டி உள்ளிட்டபல படங்களில் நடித்துள்ள அம்மு அபிராமி விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக்கு வித் கோமாளி சீசன் 3' நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு தன்னுடைய சமைக்கும் திரையை வெளிப்படுத்தினார். அதன் காரணமாக குக்கு வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியின் இரண்டாவது ரன்னர் அப்பாக வெற்றி பெற்றார். இந்த நிகழ்ச்சியின் மூலம் அம்மு அபிராமி பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். 


 



தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் பிஸியாக நடித்து வருகிறார். ஹீரோயினாக நடிப்பதைக் காட்டிலும் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்கவே அதிகம் விரும்பி தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான கண்ணகி, ஹாட்ஸ்பாட் உள்ளிட்ட படங்களில் அவரின் நடிப்பு பாராட்டைப் பெற்றது. 


அம்மு அபிராமி - பார்திவ் மணி :


சில நாட்களுக்கு முன்னர் அம்மு அபிராமியும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இயக்குநராக இருந்த பார்திவ் மணி இருவருக்கும் இடையே நெருக்கமான உறவு இருப்பதாக செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தன. அதற்கு காரணம் அவர்கள் இருவரும் எந்த ஒரு பொது இடத்திற்கு போனாலும் ஜோடியாக போவது, அடிக்கடி சோசியல் மீடியாவில் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்வது, இருவரும் பிறந்தநாளுக்கு போஸ்ட் மூலம் அபரிதமான அன்பை வெளிப்படுத்துவது என இருந்தது தான் சந்தேகத்துக்கு இடம் கொடுத்தது.


அதிலும் குறிப்பாக கடந்த மாதம் பிறந்தநாள் கொண்டாடிய பார்திவ் மணிக்கு அம்மு அபிராமி சோசியல் மீடியா மூலம் "பிறந்ததற்கு நன்றி... என் வாழ்க்கையில் வந்ததற்கு நன்றி" என கூறி போஸ்ட் பகிர்ந்தது, தங்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் காதலை உறுதிப்படுத்தும் வகையில் போஸ்ட் ஒன்றை பகிர்ந்து இருந்தார். இந்தத் தகவல் காட்டுத்தீ போல மிகவும் வேகமாக பரவியது. 


 



 


மணக்கோலத்தில் அம்மு அபிராமி :


 


இந்நிலையில் அம்மு அபிராமியின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. மணப்பெண் கோலத்தில் மாலையும் கழுத்துமாக தாலி கயிறுடன் மணப்பந்தலில் நிற்கும் அம்மு அபிராமி புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்த அம்மு அபிராமியின் ரசிகர்கள் அதிர்ச்சியாக உள்ளனர். மாப்பிள்ளையை பார்த்தால் பார்திவ் மணி போல இல்லையே? அப்போ அம்மு அபாரமி - பார்திவ் மணி இடையே காதல் எதுவும் இல்லையா? அல்லது இது ஏதாவது படத்தின் ஷூட்டிங் சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமா ரசிகர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்தன. அந்த கேள்விகளுக்கு பதிலாக தகவல் ஒன்று வெளியானது. 


 


'ஜமா' படத்தின் நாயகி : 


அறிமுக இயக்குநர் பாரி இளவழகன் இயக்கத்தில் தெருக்கூத்து கலையையும், அதில் பெண் வேடமிட்டு நடிக்கும் கலைஞர்களின் வாழ்வியலை பற்றியும் பேசும் படமாக உருவாகியுள்ளது 'ஜமா'. இப்படத்தில் பாரி இளவழகன், அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், கே. வி. என். மணிமேகலை, வசந்த் மாரிமுத்து, சிவா மாறன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.  

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் அதன் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாக உள்ளது. 'ஜமா' நாயகியாக அம்மு அபிராமி நடித்துள்ளார். அந்த படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியின் புகைப்படம் தான் மணக்கோலத்தில் அம்மு அபிராமி இருப்பது போன்ற புகைப்படம்.  அறிமுக இயக்குநர் பாரி இளவழகன் இயக்கத்தில் தெருக்கூத்து கலையையும், அதில் பெண் வேடமிட்டு நடிக்கும் கலைஞர்களின் வாழ்வியலை பற்றியும் பேசும் படமாக உருவாகியுள்ளது 'ஜமா'. இப்படத்தில் பாரி இளவழகன், அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், கே. வி. என். மணிமேகலை, வசந்த் மாரிமுத்து, சிவா மாறன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.  

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் அதன் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாக உள்ளது. 'ஜமா' நாயகியாக அம்மு அபிராமி நடித்துள்ளார். அந்த படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியின் புகைப்படம் தான் மணக்கோலத்தில் அம்மு அபிராமி இருப்பது போன்ற புகைப்படம்.