Watch video : அம்முவுக்கும் பார்த்திவ் மணிக்கும் சம்திங் சம்திங்கா? வைரலாகும் வீடியோ

Watch Video : நடிகை அம்மு அபிராமி, பார்த்திவ் மணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்தது வதந்தியை கிளப்பியுள்ளது.

Continues below advertisement

தமிழ் சினிமாவில் அசுரன், ராட்சசன், யானை, தண்டட்டி உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை அம்மு அபிராமி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான ரியாலிட்டி  ஷோவான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். 

Continues below advertisement

அடுத்தடுத்து பல படங்களிலும் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் அம்மு அபிராமி. இந்நிலையில் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் முதல் நான்கு சீசன்களை இயக்கியவர் பார்த்திவ் மணி. அவரின் பிறந்தநாளை முன்னிட்டு அம்மு அபிராமி பார்த்திவ் மணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்றை பகிர்ந்து "ஹேப்பிஸ்ட் பர்த்டே டியர் பார்த்திவ் மணி. பிறந்ததற்கு நன்றி, வாழ்வில் வந்ததற்கு நன்றி" என கேப்ஷனுடன் போஸ்ட் செய்து இருந்தார்.

இதை பார்த்த அம்மு அபிராமியின் ரசிகர்கள் லைக்ஸ்களை கொடுத்து வருவதுடன் அவர்கள் இருவருக்கும் இடையில் ஏதாவது இருக்குமோ? என்றும் இதன் மூலம் கன்பார்ம் ஆயிடுச்சு என கமெண்ட் மூலம் தெரிவித்து வருகிறார்கள். 

கடந்த மார்ச் மாதம் அம்மு அபிராமியின் பிறந்தநாளுக்கு, பார்த்திவ் மணி இன்ஸ்டாகிராம் மூலம் வாழ்த்து தெரிவித்த போதும் இதே போல வதந்திகள் பரவின என்பது குறிப்பிடத்தக்கது. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அம்மு அபிராமி அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அடிக்கடி போஸ்ட் செய்வதுண்டு. பல விருது வழங்கும் விழா, பொது நிகழ்ச்சிகளில் கூட இவர்கள் இருவரும் ஜோடியாகவே கலந்து கொண்டுள்ளனர். சமீபத்தில் அம்மு அபிராமி மலேசியா சென்ற போது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். அதே சமயத்தில் பார்த்திவ் மணியும் மலேசியாவில் எடுத்த புகைப்படங்களை போஸ்ட் செய்து இருந்தார். 

பார்த்திவ் மணியின் ஒவ்வொரு போஸ்டுக்குமே அன்பான கமெண்ட்களை அம்மு அபிராமி போஸ்ட் செய்வது வழக்கம். இருவரும் டேட்டிங் செய்து வருவது தெரிந்தாலும் இதுவரையில் அவர்கள் எந்த ஒரு அதிகாரபூர்வமான அறிவிப்பையும் வெளியிடவில்லை. 

Continues below advertisement
Sponsored Links by Taboola