மலையாள நடிகர்கள் மணியன்பிள்ளை ராஜு, லால் மற்றும் விஜய் பாபு ஆகியோர் மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் நிர்வாக குழு தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.


மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (அம்மா) செயற்குழு தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 1990களின் மத்தியில் மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் செயற்குழு தொடங்கப்பட்டு பல ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் அதிகாரப்பூர்வ குழுவால் நிறுத்தப்பட்ட மூன்று வேட்பாளர்கள் நிவின் பாலி, ஆஷா சரத் மற்றும் ஹனி ரோஸ் ஆகியோர் நடிகர்கள் மணியன்பிள்ளை ராஜு, லால் மற்றும் விஜய் பாபு ஆகியோரால் தோற்கடிக்கப்பட்டனர். 


அதேபோல், அதிகாரப்பூர்வ குழு துணைத் தலைவர் பதவிக்கு ஆஷா சரத் மற்றும் ஸ்வேதா மேனன் ஆகியோரை நிறுத்தியது. இதற்கிடையில், அதே பதவிக்கு சுயேட்சை வேட்பாளராக ராஜூ போட்டியிட்டார். ராஜு மற்றும் ஸ்வேதா இருவரும் தேர்தலில் வெற்றி பெற்றனர். அதிகாரப்பூர்வ வேட்பாளர்களான ஹனி ரோஸ் மற்றும் நிவின் பாலி ஆகியோரை நடிகரும் தயாரிப்பாளரான விஜய் பாபு, நடிகரும் இயக்குனருமான லால் ஆகியோர் தோற்கடித்தனர்.




நடிகர் நாசர் லத்தீப்பும் செயற்குழுவில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். 11 பேர் கொண்ட செயற்குழுவிற்கு ரச்சனா நாராயணன்குட்டி, உன்னி முகுந்தன், பாபுராஜ், லீனா, சுதீர் கரமனா, டோவினோ தாமஸ், ஹனி ரோஸ், சுரபி லட்சுமி, டைனி டாம், மஞ்சு பிள்ளை மற்றும் நிவின் பாலி ஆகியோர் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். 


தேர்தலுக்கு பிறகு கொச்சியில் செய்தியாளர்களை சந்தித்த மணியன்பிள்ளை ராஜு, “நடிகர்களிடையே கருத்து வேறுபாடுகள் எதுவும் இல்லை. சூழ்நிலையை மாற்ற தேர்தலில் பங்கேற்க முடிவு எடுக்கப்பட்டது. மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம் தனது சட்டத்தை மாற்றியமைத்துள்ளது” எனத் தெரிவித்தார். 


செயற்குழு உறுப்பினர் பாபுராஜ் கூறுகையில், “நாங்கள் எங்கள் சட்டத்தை மாற்றியுள்ளோம். படப்பிடிப்புத் தளங்களில் நடிகர்கள் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் கடுமையான நடத்தை விதிகளை நாங்கள் அறிமுகப்படுத்துவோம். பெண்கள் நலனுக்காக தனி விதிகள் இருக்கும்.  மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு எதிராக சமூக ஊடக தளங்களில் பரவும் போலி செய்திகளை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண