மலையாளக் கலைஞர்கள் சங்கக் கூட்டத்தில் மலையாள பிரபலங்களுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 


மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (அம்மா) செயற்குழு தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு மலையாள கலைஞர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டு நிர்வாகிகளை தேர்வு செய்தனர். இந்த கூட்டத்தில் நடிகை கீர்த்தி சுரேஷும் முதல் முறையாக கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் பல மலையாள பிரபலங்களுடன் புகைப்படங்களை எடுத்துக்கொண்டார். 


இதுகுறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு மகிச்சியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், “முதல்முறையாக மலையாளக் கலைஞர்கள் சங்கக் கூட்டத்தில் சில விருப்பமான நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் சந்திப்பது அருமையாக இருந்தது. இந்த வாய்ப்பை உருவாக்கியதற்கு மிக்க நன்றி, அம்மா!” என்று கேப்ஷ்ன் கொடுத்துள்ளார். 






 


தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் கீர்த்தி சுரேஷ். கேரளாவில் பிறந்து வளர்ந்தவர். அவரது அப்பா சுரேஷ் குமார் ஒரு தயாரிப்பாளர், அதேபோல் கீர்த்தி சுரேஷின் தாயார் மேனகாவும் ஒரு நடிகை. கடந்த 2015ஆம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து விஜய், சிவகார்த்திகேயன், விஷால், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். தமிழ் மொழியைப்  போலவே தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார். 




இதனிடையே கீர்த்தி சுரேஷ், ட்விட்டரில் தென்னிந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.ட்விட்டர் நிறுவனம் ஆண்டின் இறுதி மாதத்தில் அந்த ஆண்டு அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஸ்டேக்குகள், அதிகம் பகிரப்பட்ட ட்வீட்டுகள் ஆகியவற்றை வெளியிடுவது வழக்கம். அந்தவகையில், 2021ஆம் ஆண்டில் தென்னிந்திய அளவில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட நடிகைகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் கீர்த்தி சுரேஷ் முதலிடத்தில் உள்ளார். 


இதனிடையே கீர்த்தி சுரேஷை ஒருவர் ஆபாச வார்த்தைகளால் திட்டும் வீடியோ ஒன்று கேரளாவில் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்த வீடியோ நடிகர் சங்கத் தலைவர் மோகன்லாலின் கவனத்துக்கு சென்றது. உடனடியாக அவர் அதை கீர்த்தியின் தந்தை சுரேசஷ் குமாருக்கு அனுப்பி, இதுகுறித்து போலீசில் புகார் அளிக்குமாறு தெரிவித்தார். இதை தொடர்ந்து அவர் திருவனந்தபுரம் டிஜிபி அவலுவலகத்தில் புகார் அளித்தார்.


கேரள திரையுலகில் நடைபெற்று முடிந்த அம்மா தேர்தலில் அதிகாரப்பூர்வ குழுவால் நிறுத்தப்பட்ட மூன்று வேட்பாளர்கள் நிவின் பாலி, ஆஷா சரத் மற்றும் ஹனி ரோஸ் ஆகியோர் நடிகர்கள் மணியன்பிள்ளை ராஜு, லால் மற்றும் விஜய் பாபு ஆகியோரால் தோற்கடிக்கப்பட்டனர்.