பிரபல நடிகர் அமிதாப் பச்சன் தன்னுடைய கடந்த கால வாழ்க்கையைப் பற்றி சிறிய குறிப்பு ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவரது 1,640 சம்பளத்தையும், நண்பர் கூட்டத்துடன் சிறிய அறையில் வாழ்ந்த நாட்களையும் நினைவு கொண்டுள்ளார். அத்துடன் அவருடைய சம்பள படிவத்தையும், இறுதிநாள் விவரங்களையும் இணைத்துள்ளார்.






அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, அந்த நாட்களில்…கல்கத்தாவில்… தற்போதைய கொல்கத்தா….


மிகவும் சுதந்திரமான காலங்கள் அவை! பத்துக்கு பத்து அறையில் நாங்கள் எட்டு பேர்… அலுவலக நேரங்கள்… மாலையில் நண்பர்களுடன் பிரபல அங்காடிகள்…  உள்ளே நுழைய காசில்லாமல் வெளியே நின்று வேடிக்கை பார்ப்பது…ஒரு நாள் உள்ளே செல்வோம் என்ற நம்பிக்கையுடன்..! என்று அழகாக தனது கடந்த கால வாழ்க்கையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.


மேலும் அவர் ஒரு நடிகராக பிரபலமான பின், தற்போது நிலை எவ்வாறு தலைகீழாக மாறிப் போனது பற்றியும் கூறியுள்ளார்.






புதிய வேலை… அதே நகரத்தில் படப்பிடிப்பு…அதே இடங்களுக்கு மீண்டும் செல்ல நேரும்போது… விருந்தினராக அழைக்கப்படும் போது…அந்த மாற்றம்…கடந்த காலத்தையும் மக்களையும் நினைவு கூர்ந்தது. நள்ளிரவில் அந்த தெருக்களை தற்போது சென்று பார்க்கையில், ஒவ்வொரு இடத்திலும் பழைய நினைவுகள் ஓட்டிக் கொண்டிருக்கின்றன. சில கசப்பான நினைவுகளும் தான்…


ஆனால் பொதுவாக ஒவ்வொரு நிகழ்விலும் ஓர் நன்மை இருக்கிறது. சில நண்பர்களின் இழப்பு, சிலர் இன்னும் அருகில்…அந்த நாட்கள் அப்போது கிடைத்த அன்பு…நம்முடன் எப்போதும் இருக்கும். தற்போது அன்பு, பாசம், மரியாதை கருணை நிறைந்த  புது நண்பர்கள்… என நடிகர் அமிதாப் பச்சன் குறிப்பிட்டுள்ளார். நடிகர் அமிதாப் தற்போது நடிகர் பிரபாஸ் நடிக்கும் புதிய படமொன்றில்  இணைந்து நடித்து வருகிறார்.