பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில் ஒருவரான அமித் பார்கவ், தன் உடன்பிறந்த தம்பியின் திருமணத்தில் கூட கலந்து கொள்ளவில்லை. இதனை ரசிகர்கள் விமர்சித்த நிலையில் அவரது மனைவியும், பிரபல தொகுப்பாளியான ஸ்ரீரஞ்சனி விளக்கம் கொடுத்துள்ளார். 

Continues below advertisement

பிக்பாஸ் சீசன் 9

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனானது இயக்குநர் பிரவீன் காந்தி, விஜே பார்வதி, வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், அரோரா, வியானா, எஃப் ஜே, துஷார், பிரவீன், ஆதிரை, கனி திரு, கானா வினோத், ரம்யா ஜோ, சபரி நாதன், கெமி, சுபிக்‌ஷா, திருநங்கை அப்சரா, நந்தினி, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதீன், அகோரி கலையரசன் என 20 பேர் கலந்து கொண்டனர். இதில் வைல்ட் கார்ட் போட்டியாளர்களாக திவ்யா கணேஷ், அமித் பார்கவ், பிரஜின், அவர் மனைவி சாண்ட்ரா ஆகியோரும் உள்ளே வந்தனர். 

இதில் நந்தினி, அப்சரா, பிரவீன், பிரவீன் காந்தி, துஷார், கெமி, ஆதிரை, கலையரசன், திவாகர் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். தற்போது மீண்டும் ஆதிரையை உள்ளே அனுப்பியுள்ளனர். 

Continues below advertisement

 

தம்பி திருமணத்தில் கலந்து கொள்ளாத அமித் 

இந்த நிலையில் நவம்பர் 30ம் தேதி வார இறுதி எபிசோட் ஒளிபரப்பானது. அப்போது விஜய் சேதுபதியிடம் பேசிய அமித் பார்கவ், இன்று தனது தம்பி திருமணம், நீங்கள் வாழ்த்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். இது நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சொந்த தம்பியின் திருமணத்தை விட பிக்பாஸ் தான் முக்கியமா என சமூக வலைத்தளங்களில் கேள்வியெழுப்பினர். இவற்றிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமித் பார்கவின் மனைவி ஸ்ரீரஞ்சனி பதிலளித்துள்ளார். 

விளக்கம் கொடுத்த மனைவி

ஊடகம் ஒன்றில் பேசிய அவர், “அமித் பார்கவின் தம்பிக்கும், போபாலைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் பெண் வீட்டார் முறைப்படி போபாலில் வைத்து இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. மணமகன் வீட்டார் சார்பில் நடக்கும் சடங்குகள் இன்று, நாளை பெங்களூருவில் நடைபெறுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்ததால் அமித்தால் இந்த திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. 

பிக்பாஸ் வாய்ப்பு வந்தபோதே அவரது தம்பியின் திருமண தேதி உறுதி செய்யப்பட்டிருந்தது. எனினும் சினிமா, டிவி போன்ற மீடியா உலகில் வாய்ப்புகள் வரும்போது அதனை தவற விடக்கூடாது என்பதால் அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டார். கண்டிப்பாக அமித்தின் மனது முழுக்க இந்த திருமண நிகழ்வில் தான் இருந்திருக்கும் என நினைக்கிறேன். வீட்டில் எல்லாருக்கும் கஷ்டமா தான் இருந்துச்சு. ஆனால் பொறுத்துக் கொண்டோம். 

பிக்பாஸ் வீட்டிலும், வெளியிலும் சரி அவர் விளையாடிய விதத்தை வைத்து இதுவரை எந்த கெட்ட பெயரும் ஏற்படவில்லை. அதில் கலந்து கொள்ளும் எல்லாருக்கும் டைட்டில் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அமித் 100 நாட்கள் அந்த வீட்டில் இருப்பார் என நினைக்கிறேன்” என கூறியுள்ளார்.