அமீர்கானின் முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கத்தில் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள படம் “லாபதா லேடீஸ்”
அமீர் கான் - கிரண் ராவ்
அமீர் கான் மற்றும் கிரண் ராவ் ஆகிய இருவருக்கும் இடையே 2005ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் அசாத் என்ற மகன் 2011ஆம் ஆண்டு பிறந்தார். இதற்கு முன்பாக அமீர் கானுக்கு ரீனா தத்தா என்பவருடன் முதல் திருமணம் நடைபெற்று இருந்தது.
அதில் அவருக்கு ஐரா கான் மற்றும் ஜூனைத் கான் என்ற இரு குழந்தைகள் பிறந்திருந்தன. இவர்கள் இருவரும் கடந்த 2002ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பின்னர் அமீர் கான் - கிரண் ராவை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து 15 ஆண்டுகள் கழித்து இந்த தம்பதியினர் விவாகரத்து செய்துகொள்ள முடிவு செய்தார்கள். இதனைத் தொடர்ந்து தற்போது விவாகரத்து பெற்று இருவரும் நெருங்கிய நட்புறவு பாராட்டி வருகிறார்கள்.
லாபதா லேடீஸ்
அமீர் கான் தயாரிப்பில் அவரது முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கியிருக்கும் படம் ‘லாபதா லேடீஸ் ‘. பிரதிபா ரந்தா, ஸ்பர்ஷ் ஸ்ரீவஸ்தவா நிதான்ஷி கோயல், சாயா கடம் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அமீர் கான், கிரண் ராவ், கோதி தேஷ்பாண்டே ஆகிய மூவரும் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளார்கள்.
இன்று திரையரங்கில் இப்படம் வெளியாகி இருக்கிறது. காமெடி டிராமா ஜானரில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தான் இயக்கியிருக்கும் முதல் படத்திலேயே விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் கிரண் ராவ்.