அமெரிக்காவின் புகழ் பெற்ற ராப் பாடகர்கள் வரிசையில் முதல் இடத்தில் இருப்பவர் கான்யே வெஸ்ட். 2005 காலக்கட்டங்களில் இவரது பாடல்கள்தான் பலரது வாய்களில் முணுமுணுக்கப்பட்டது. ஹார்ட்லஸ், ஃபேளாஷ்லைட்ஸ், மெர்ஸி உள்ளிட்ட பாடல்கள், மாஸ் ஹிட் அடித்தன. இசை உலகிற்கு வந்த புதிதிலிருந்தே, ஏறும் மேடைகளிலெல்லாம் ஏதாவதொன்றைக் கூறி, மக்களின் கவனத்தை ஈர்ப்பதை தனது வழக்கமாக கொண்டுள்ளார் கான்யே வெஸ்ட். இதனால், பல ரசிகர்களைக் கொண்டிருந்த இவர் தற்போது பலரால் வெறுக்கப்படும் மனிதர்களுள் ஒருவராகிவிட்டார்.
சமீபத்தில் விவாகரத்து:
கான்யே வெஸ்டிற்கும், ஹாலிவுட்டில் மிகப்பெரிய பிரபலமாக இருக்கும் கிம் கார்தாசியனுக்கும் 2014ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது. நன்றாக போய்க்கொண்டிருந்த இவர்களது திருமண வாழ்க்கையில் என்ன ஆனதோ தெரியவில்லை சில மாதங்களுக்கு முன்னர் இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டனர். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், முன்னாள் பிரதமர் டொனால்டு ட்ரம்ப் தனது முன்னாள் மனைவியை அவமதித்ததாக கான்யே வெஸ்ட் சாடியுள்ளார்.
ட்ரம்ப் குறித்த வீடியோ:
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் கான்யே வெஸ் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் பரவி வந்தது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் கான்யே வெஸ்ட் ஒரு வீடியோவைப் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் பேசியுள்ள அவர், முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்பை சந்தித்த நிகழ்வை நினைவு கூர்ந்துள்ளார். “மார்-அ-லேகோ டி பிரீஃப்” எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், டொனால்ட் ட்ரம்ப் தனது முன்னாள் மனைவி கிம் கார்தாசியனை கடுமையான வார்த்தைகளால் திட்டியதாக கான்யே வெஸ்ட் கூறியுள்ளார்.
ட்ரம்பின் ட்விட்டர் தடை நீக்கம்:
சமூக வலைதளமான ட்விட்டரில், தவறான அல்லது கிளிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை தெரிவிப்பவர்களின் கணக்குகளுக்கு ட்விட்டர் நிறுவனம் தடை விதித்தது. அந்த தடை லிஸ்டில் டொனால்ட் ட்ரம்ப், சிட்னி போவெல், டேவிட் டூக் உள்ளிட்ட பலர் சிக்கினர். எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்திற்கு முதலாளி ஆனதைத் தொடர்ந்து, டெனால்ட் ட்ரம்பின் கணக்கின் மீதிருந்த தடை நீக்கப்பட்டது. இதையடுத்து, ட்ரம்பின் ட்விட்டர் கணக்கின் மேல் விழுந்த தடை நீங்கியதையடுத்து, கான்யே மேற்கூறிய வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வெளியானதையடுத்து, ”முன்னர் சகோதரர்கள் போல, கட்டித்தழுவி போட்டோக்களுக்கு போஸ் கொடுத்து வந்த ட்ரம்பும் கான்யேவும் இன்று மாறி மாறி சமூக வலைதளங்களில் திட்டிக்கொண்டு வருவது ஏன்?” என பலர் கேள்வியெழுப்பி வருகின்றனர்.