அமரன்


ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் திரைப்படம் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியானது. சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும் சாய் பல்லவி இந்து ரெபெக்கா வர்கீஸாக இப்படத்தில் ரசிகர்களை கவர்ந்துள்ளார். வெகுஜன மத்தியில் கொண்டாடப்பட்டு 200 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியுள்ள அமரன் திரைப்படம் இன்னொரு பக்கம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக அமரன் திரைப்படத்திற்கு தடை விதிக்குமாறும் கோரிக்கை வைக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.  அமரன் படத்தின் மீது கீழ் வரும் குற்றச்சாட்டுக்களை விமர்சகர்கள் முன்வைத்துள்ளார்கள்.



  • காஷ்மீரில் இஸ்லாமியர்களை பயங்கரவாத சிந்தனைக்கொண்டவர்களாகவும் தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பவர்களாகவும் இப்படம் சித்தரிக்கிறது

  • படத்தில் மேஜர் முகுந்தின் சாதிய அடையாளம் மாற்றி குறிப்பிடப்பட்டுள்ளது

  • ஒரு தனி நபரின் வாழ்க்கையை தழுவிய கதை என்றாலும் இந்திய ராணுவம் மற்றும் காஷ்மீர் மக்கள் இடையிலான உண்மை நிலவரத்தை பற்றி படம் பேசவேயில்லை.


அமரன் பட விமர்சனங்களுக்கு ராஜ்குமார் பெரியசாமி விளக்கம்


இந்த விமர்சனங்களுக்கு ஏற்கனவே அமரன் படத்தின் வெற்றி விழாவில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி விளக்கமளித்தார். மேஜர் முகுந்தின் சாதி அடையாளத்தை குறிப்பிடாமல் அவரை ஒரு தமிழனாக படத்தில் காட்ட வேண்டும் என்று முகுந்தின் பெற்றோர்கள் கேட்டுக்கொண்டதாக ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்தார். தொடர்ந்து நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அமரன் படத்தின் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு திட்டவட்டமான பதில்களை கொடுத்தார் 


" ராணுவத்துறை பற்றிய படம் ஒன்று எடுத்தால் அதை பாதுகாப்புத் துறை அமைச்சகம் மற்றும் ஏ.டி.ஜி.பி.ஐ ஆகிய இரு துறையைச் சேர்ந்தவர்கள் பார்த்து அனுமபதி வழங்காமல் வெளியிட முடியாது. அப்படி அவர்கள் பார்த்து அவர்களின் பாராட்டுக்களைப் பெற்று வெளியான படம் தான் அமரன். ஒவ்வொருத்தரும் தங்களுக்கு தெரிந்த தகவல்களை வைத்து ஒரு கருத்தை சொல்கிறார்கள். அது எல்லாவற்றுக்கும் பதில் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது. என்னுடைய அரசியல் பார்வைகளை சொல்லும் படம் இது இல்லை. என்னுடைய அரசியல் கருத்துக்களை கதாபாத்திரங்களுக்கு நான் திணிக்க முடியாது. எங்களுக்கு சமூக பொறுப்பு இருக்கிறது. அமரன் திரைப்படம் அந்த சமூக பொறுப்போடு  சரியாக எடுக்கப்பட்டதாக நான் நம்புகிறேன்" என ராஜ்குமார் பெரியசாம் தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க : Kamal Haasan: கமல் செஞ்ச காரியத்தாலதான் கார்த்திக்கை இப்படி சொல்றாங்க! என்ன சொல்றீங்க?


BiggBoss Tamil: "இந்தி திமிர் காட்டினாரா சௌந்தர்யா?" பிக்பாஸ் வீட்டில் நடந்தது இதுதான் - நீங்களே பாருங்க