Kamal Haasan: கமல் செஞ்ச காரியத்தாலதான் கார்த்திக்கை இப்படி சொல்றாங்க! என்ன சொல்றீங்க?

பிரபல நடிகர் கார்த்திக்கிற்கு முன்பே தமிழ் ரசிகர்களால் கமல்ஹாசன் நவரச நாயகன் என்ற பட்டத்தால் அழைக்கப்பட்டு வந்தார்.

Continues below advertisement

தமிழ் திரையுலகின் அடையாளமாக திகழ்பவர் கமல்ஹாசன். தன்னுடைய சிறுவயது முதலே நடித்து வரும் கமல்ஹாசன் இன்று வரை அதே புத்துணர்ச்சியுடன் நடித்து வருகிறார். நடிகர், இயக்குனர். பாடலாசிரியர், தொழில்நுட்ப கலைஞர், நடனக் கலைஞர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகத் தன்மை கொண்ட கமல்ஹாசனை அவரது ரசிகர்கள் அன்புடன் ஆண்டவர், உலக நாயகன், நம்மவர் என பல பெயர்களில் அழைத்து வருகின்றனர்.

Continues below advertisement

கார்த்திக்கிற்கு முன்பே கமல்:

தமிழ் ரசிகர்களால் பெரும்பாலும் ஆண்டவர் என்றும், உலக நாயகன் என்றும் அழைக்கப்படும் கமல்ஹாசன் ஒரு காலத்தில் நவரச நாயகன் என்று அழைக்கப்பட்டு வந்தார் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தமிழ் திரையுலகின் நவரச நாயகன் என்று கார்த்திக் அழைக்கப்பட்டு வருகிறார்.

ஆனால், கார்த்திக்கிற்கு அந்த பட்டம் ரசிகர்களால் வழங்கப்படுவதற்கு முன்பு கமல்ஹாசன் அந்த பெயரால் அழைக்கப்பட்டு வந்தார். எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு பிறகு தமிழ் திரையுலகில் மிகப்பெரிய அளவில் கோலோச்சியர் கமல்ஹாசன். ரஜினிகாந்த் 5 ஆயிரம் ஊதியம் பெற்றுக் கொண்டிருந்த காலத்திலே ரூபாய் 25 ஆயிரம் ஊதியம் பெற்றவர் நடிகர் கமல்ஹாசன்.

உண்மையான நவரச நாயகன்:

கமல் வளர்ந்து வந்த காலத்தில்  ஆக்‌ஷன், காதல் என நவரசங்களையும் தனது நடிப்பால் காட்டி சிவாஜிக்குப் பிறகு கமல்தான் என்று பெயரெடுத்தார். அப்போது, அவரது பல படங்களும் வெள்ளி விழா கொண்டாடியது. இதையடுத்து, அந்த படங்களின் வெள்ளி விழா காட்சிகளின்போது நவரச நாயகன் என்ற டைட்டில் கார்ட திரையரங்குகளில் போடப்பட்டது.

பின்னர், பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகன் கார்த்திக்கிற்காக அந்த பட்டத்தை விட்டுக்கொடுத்தவர் கமல்ஹாசன். முத்துராமனின் மகனான முரளி கார்த்திக்காக பாரதிராஜா படம் மூலமாக அலைகள் ஓய்வதில்லை படம் மூலமாக அறிமுகமானார்.

கார்த்திக் தன்னுடைய வித்தியாசமான கதைத்தேர்வால் ஆக்‌ஷன் மற்றும் காதல் நாயகனாக உலா வந்தார். அன்றைய காலத்தில் பெண்களின் கனவு நாயகனாக கார்த்திக் உலா வந்தார். கார்த்திக்கின் சிறப்பான நடிப்பால் நவரச நாயகன் என்ற பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார். கமல்ஹாசனும் பின்னாட்களில் அந்த நவரச நாயகன் என்ற பட்டத்தை நிரந்தரமாக விட்டுக் கொடுத்தார்.

ரசிகர்கள் அதிர்ச்சி:

கமல்ஹாசனை தொடக்க காலத்தில் காதல் இளவரசன் என்று ரசிகர்களாலும், பின்னர் நவரச நாயகன் என்றும், நம்மவர் என்றும் அழைத்தனர். தசாவதாரம் படத்திற்கு பிறகு உலக நாயகன் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டு வந்தார். மேலும், ஆழ்வார்பேட்டை ஆண்டவர் என்றும் அவரை ரசிகர்கள் அழைக்கின்றனர்.

இந்த நிலையில், கமல் தன்னை எந்த பட்டங்களாலும் அழைக்க வேண்டாம் என்று கூறியிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.

Continues below advertisement