அமரன்


இந்த ஆண்டின் ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படமாக அமரன் திரைப்படம் அமைந்துள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன்  நடித்த அமரன் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகியது. மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவானது. பெரும்பாலும் காமெடி கதாபாத்திரங்களை சிறப்பாக செய்துவந்த சிவகார்த்திகேயன் இப்படத்தில் முழுக்க முழுக்க சீரியஸான ராணுவ வீரராக இப்படத்தில் நடித்திருந்தது ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேஜர் முகுந்தின் மனைவி இந்துவின் கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் ரசிகர்களின் பாராட்டுக்களை குவித்தார். 


வசூல் அசத்திய அமரன்


வசூல் ரீதியாகவும் சிவகார்த்திகேயனுக்கு கரியரை மாற்றும் படமாக அமைந்துள்ளது அமரன். உலகளவில் 300 கோடி வசூல் செய்து முன்னணி நடிகராக ப்ரோமோட் செய்துள்ளது. இனி வரும் சிவகார்த்திகேயன் படங்கள் வசூல் ரீதியாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு அடித்தளமாக அமைந்துள்ளது அமரன். 


சிவகார்த்திகேயனை கெளரவித்த ராணுவ அதிகாரி பயிற்சி மையம்


அமரன் படத்தில் மேஜர் முகுந்தின் கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்ததற்காக நடிகர் சிவகார்த்திகேயனை கெளரவித்துள்ளது ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம். அமரன் படத்தின் டீசர் வெளியானபோது இப்படத்திற்கு சிவகார்த்திகேயன் செட் ஆவாரா என்கிற சந்தேகத்தை பலர் வெளிப்படுத்தி இருந்தார்கள். அந்த சந்தேகங்களுக்கு எல்லாம் பதில் சொல்லும் வகையில் மேஜர் முகுந்தாக திரையில் அசத்தினார் சிவகார்த்திகேயன். கண் முன் இல்லாத ஒரு மனிதனைப் போல் நடித்து அந்த கதாபத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் சவாலை சிவகார்த்திகேயன் கையிலெடுத்து அதை சிறப்பாக செய்துள்ளார். 




சிவகார்த்திகேயன் அடுத்தபடியாக ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்.கே 23 படத்தில் நடித்துள்ளார். இன்று தனது 24 ஆவது படத்தின் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறார். டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இப்படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்திற்கு பாஸ் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அமரன் படத்திற்கு பின் ஒரு லைட்டான சிவகார்த்திகேயனை இப்படத்தில் பார்க்கலாம் என படக்குழு தெரிவித்துள்ளார்கள்