தமிழில் மைனா திரைப்படம் மூலம் புகழடைந்தவர் நடிகை அமலா பால் . நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது "கடாவர்"  திரைப்படம் மூலம்ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். பல போராட்டங்களுக்கு பின்னர் படம்  டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.  "கடாவர்" திரைப்படம் ஐந்து மொழிகளில் ஆகஸ்ட் 12ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.. 






நடிப்பை விட்டு விலக முடிவெடுத்த அமலா பால் 


நான் 2020 ஆம் ஆண்டு என்னுடைய சினிமா கெரியரை முடிக்க விரும்புவதாக அம்மாவிடம் சொன்னேன். எனக்கு எதுவுமே மகிழ்ச்சியாக இல்லை. என்னுடைய வாழ்க்கை , என் கெரியர் எல்லாத்தையும் இழந்தது போல உணர்ந்தேன். நான் 17 வயதிலிருந்து தொடர்ந்து உழைக்கிறேன். ஆனால் எனக்காக ஒரு நிமிடம் கூட யோசிக்கவில்லை. பிரேக் எடுக்கவில்லை. நான் என்னை திரும்பி பார்த்து நீ நல்லா பண்ணியிருக்க அமலா ! நீ ஒரு நல்ல நடிகை அப்படினு எனக்கு நானே ஆறுதலாக இல்லை.  2020 ஆம் ஆண்டு என் அப்பா இறந்துட்டாங்க , கொரோனா நேரம் வேற , அப்போதான் நான் நினைத்தேன் , நீ நின்னுதான் ஆகணும் , உன்னால இனிமேல் ஓட முடியாது. நீ எல்லாத்தையும் எதிர்க்கொண்டுதான் ஆகணும்னு முடிவு பண்ணேன். அது எனக்கு ஒரு மறு பிறப்பு மாதிரி “ என்றார் அமலா பால் 







கடாவர் வெற்றியை தொடர்ந்து அமலா பால் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள திரைப்படம் ’அதோ அந்த பறவை போல’ . இந்த  திரைப்படம் ஆகஸ்ட் 26ம் தேதி வெளியாக தயாராக இருக்கிறது. சில காரணங்களால் இப்படமும் தாமதமாகிக் கொண்டே போனது. அமலா பால் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாவது அவரது நலன் விரும்பிகள் மற்றும் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.