Watch Video: முத்தங்களும் காதலும்.. கர்ப்பமான அமலா பாலை தாங்கும் கணவர்: வீடியோ பகிர்ந்து நெகிழ்ச்சி!
Amala Paul: பிருத்விராஜ் உடன் அமலா பால் நடித்திருக்கும் ஆடு ஜீவிதம் திரைப்படம் இந்த மாதம் 28ஆம் தேதி வெளியாகும் நிலையில், பட ப்ரொமோஷன்களில் கர்ப்பிணியாக கலந்து கொண்டு பாராட்டுகளைப் பெற்றார்.

தமிழ் சினிமா தொடங்கி டோலிவுட், பாலிவுட் என பிரபல நடிகையாக வலம் வரும் அமலா பால் (Amal Paul), கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தன் காதலர் ஜெகத் தேசாயை எளிய முறையில் கேரளாவில் திருமணம் செய்து கொண்டார்.
மகிழ்ச்சியின் உச்சத்தில் அமலா பால்!

Just In
முன்னதாக கடந்த 2014ஆம் ஆண்டு இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட அமலா பாலுக்கு பல்வேறு காரணங்களால் அந்த மண வாழ்க்கை நீடிக்காத நிலையில், இருவரும் 2016ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.
தொடந்து சிங்கிளாக வலம் வந்த அமலா பால், நடிப்பு, ட்ராவல் என பிசியாகி தன் சோகங்களிலுருந்து மீண்டு வந்தார். இந்நிலையில் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் தன் காதலர் ஜே.தேசாயை அறிமுகப்படுத்திய கையுடன் ஒரே மாதத்தில் அவரை திருமணம் செய்து கொண்டு தன் கர்ப்பத்தையும் அறிவித்தார்.
7 மாத கர்ப்பம்
தற்போது 7 மாத கால குழந்தையை கருவில் சுமந்திருக்கும் அமலா பால், தொடர்ந்து ஆன்மிகப் பயணம், பேபி மூன் பயணம் என தன் கர்ப்ப காலத்தை மகிழ்ச்சியுடன் செலவழித்து புகைப்படங்கள் பகிர்ந்து ரசிகர்களுடன் இணையத்தில் உரையாடி வருகிறார்.
மேலும், பிருத்விராஜ் உடன் அமலா பால் நடித்திருக்கும் ஆடு ஜீவிதம் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த மாதம் 28ஆம் தேதி வெளியாகும் நிலையில், முன்னதாக பட ப்ரொமோஷன்களில் கர்ப்பிணியாக கலந்து கொண்டு பாராட்டுகளைப் பெற்றார்.
வீடியோ பகிர்ந்த அமலா
இந்நிலையில் தன் 7 மாத கர்ப்ப காலத்தை கடந்தது பற்றி அமலா பால் க்யூட்டான வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். தன் கணவருடன் இணைந்து ஆடல் பாடல் என அமலா பால் மகிழ்ச்சியின் உச்சத்தில் திளைத்திருக்கும் நிலையில், அவரது கணவர் ஜே. தேசாயும் அமலா பாலை முத்தமிட்டு காதலில் திளைத்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
அமலா பால் இப்படி மகிழ்ச்சியாக தன் கர்ப்பகாலத்தைக் கழிப்பது அவரது ரசிகர்களையும் சந்தோஷப்பட வைத்துள்ளது. அமலா தாய்மை ததும்ப அழகாக இருக்கிறார் என்றும், இருவரது கெமிஸ்ட்ரியும் சிறப்பாக உள்ளது என்றும் ரசிகர்கள் இந்தப் பதிவில் கமெண்ட் செய்து வருகின்றனர்.