பிரபல சீரியல் நடிகை ஆல்யா மானசா வொர்க் அவுட் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


ராஜாராணி சீரியலில் செம்பா கதாபாத்திரத்தில் நடித்ததின் மூலம் பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா. இந்த சீரியலில் இவருடன் நடித்த சஞ்சீவை காதலித்த ஆல்யா அவரையே திருமணம் செய்து கொண்டார். இதனைத்தொடர்ந்து அவர் கர்ப்பமான நிலையில், அவருக்கு ஐலா என்ற பெண் குழ்ந்தை பிறந்தது. இதனால் சின்னத்திரையில் இருந்து ஒரு சின்ன பிரேக் எடுத்துக்கொண்ட அவர் பின்னர் மீண்டும் ராஜா ராணி 2 வில் களம் இறங்கினார்.


 






அவர் பிரேக் எடுத்துக்கொண்டாலும் அவருக்கான வரவேற்பு குறையவே இல்லை. ரீ என்ட்ரியில் ஐபிஎஸ் ஆக விரும்பும் கதாபாத்திரம் என்பதால் ஆக்சன் காட்சிகளிலும் நடித்து அசத்தினார். அதன் பின்னர் அவர் மீண்டும் கர்ப்பமான நிலையில் இன்னொருமுறையும் அவர் சின்னத்திரையில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டார். அவருக்கு மீண்டும் அர்ஷ் என்ற ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் மீண்டும் சின்னத்திரையில் ரீ என் ட்ரிக்காக கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.


 






இதற்கிடையே விஜய்டிவியில் நடித்து வந்த அவரது கணவர் சஞ்சீவ் சன் டிவிக்கு சென்றார். சைத்ரா ரெட்டியுடன் அவர் நடித்து வந்த கயல் சீரியல் தற்போது டி.ஆர்.பியில் உச்சத்தை தொட்டி இருக்கிறது. இந்த நிலையில் ஆல்யாவும் தனது ரீ என் ட்ரியை சன் டிவியில் கொடுக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சின்னத்திரை வட்டாரங்கள் பேசிக்கொள்கின்றன. இது குறித்து  இன்ஸ்டாவில் ஆல்யாவிடம் கேட்ட போது, கெஸ்  செய்யுங்கள் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.