நேரம், பிரேமம் படங்களின் மூலம் தமிழ், மலையாளம் இரு மொழிகளிலும் பெரும் பிரபலமைடந்தவர் மலையாள இயக்குனர் அல்ஃபோன்ஸ் புத்திரன்.


முதலில் குறும்பட இயக்குநராக தன் சினிமா வாழ்வைத் தொடங்கிய அல்ஃபோன்ஸ் புத்திரன் நேரம் படத்தை முதலில் குறும்படமாக தான் எடுத்தார். ‘நேரம்’, ‘த ஏஞ்சல்’ ஆகிய குறும்படஙக்ள் மூலம் நடிகர்கள் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா இருவரையும் சினிமாவில் பிரபலமடைவதற்கு முன்பே இயக்கினார் அல்ஃபோன்ஸ்.


இந்நிலையில், ‘த ஏஞ்சல்’ படத்தில் கதாப்பாத்திரத் தேர்வுக்காக விஜய் சேதுபதியை ‘லுக் டெஸ்ட்’ செய்ய எடுத்த புகைப்படங்களை தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிந்துள்ளார் அல்ஃபோன்ஸ் புத்திரன். 2011இல் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படங்கள் விஜய் சேதுபதி - அல்ஃபோன்ஸ் இருவரது ரசிகர்களையும் குஷிப்படுத்தி லைக்ஸ் அள்ளி வருகிறது.


 






பிரேமம் படத்துக்குப் பின் 7 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு பிருத்விராஜ், நயன்தாரா நடிப்பில் அல்ஃபோன்ஸ் புத்திரன் இயக்கிய கோல்ட் படம் சென்ற ஆண்டு வெளியானது. ஆனால் இப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இந்நிலையில், தன் அடுத்த படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க முழுவீச்சில் பணிகளில் ஈடுபட்டுள்ளார் அல்ஃபோன்ஸ் புத்திரன்.


இந்நிலையில், முன்னதாக தன் ஆதர்ச நடிகரான நடிகர் கமல்ஹாசனை சந்தித்து நெகிழ்ச்சியுடன் அல்ஃபோன்ஸ் பகிர்ந்துள்ள பதிவும் இன்ஸ்டாவில் வைரலானது.


“சினிமாவின் எவரெஸ்ட் சிகரம் உலக நாயகன் கமல்ஹாசனை முதன்முறையாக சந்தித்தேன். அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினேன். கிட்டத்தட்ட 5 முதல் 6 சினிமாக் கதைகளை அவரிடமிருந்து கேட்டேன்.




 பத்தே நிமிடங்களில் எனது புத்தகத்தில் சிறு குறிப்புகள் எடுத்துக்கொண்டேன். ஒரு தேர்ந்த கலைஞராக அவர் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். ஆனால் ஒரு மாணவனாக அவர் சொன்னவற்றில் எதையாவது நான் தவறவிட்டுவிடுவேனோ என்று பயந்தேன்.


 இந்த வாய்ப்பை எனக்களித்த பிரபஞ்சத்துக்கு நன்றி. இந்த நம்பமுடியாத, அழகான அனுபவத்துக்கு ராஜ்கமல் நிறுவனம், மகேந்திரன் மற்றும் டிஸ்னிக்கு நன்றி”  என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார் அல்ஃபோன்ஸ். இந்நிலையில் அடுத்த படத்தில் கமல்ஹாசனுடன் பணியாற்றுகிறாரா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர் அல்ஃபோன்ஸின் ரசிகர்கள்.