பிருத்விராஜ் புரொடக்ஷன்ஸ் & மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுப்ரியா மேனன் மற்றும் லிஸ்டன்ஸ் ஸ்டீபன் தயாரிப்பில், ராஜேஷ் முருகேசன் இசையில், பிரேமம் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில், நடிகர் பிரித்விராஜ், நடிகை நயன்தாரா நடிப்பில் டிசம்பர் 1ம் தேதி வெளியான திரைப்படம் 'கோல்ட்'.
ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்தது :
பிரேமம் படத்தின் அமோகமான வெற்றிக்கு பிறகு ஏழு ஆண்டு இடைவேளைக்கு பிறகு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான 'கோல்ட்' திரைப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது. படத்தின் திரைக்கதையின் மீது இருந்த நம்பிக்கையால் பெரிய அளவில் விளம்பர பணிகள் மேற்கொள்ளாமல் வெளியிடப்பட்ட இப்படம் முதல் நாள் முதலே எதிர்மறையான விமர்சனங்களை குவித்தது. வேற லெவலில் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இது ஒரு ஏமாற்றமாகவே இருந்தது.
நெகடிவ் விமர்சகர்களுக்கு பதிலடி :
அதை தொடர்ந்து ரசிகர்கள் சோசியல் மீடியா மூலம் ட்ரோல், நெகடிவ் விமர்சனங்கள் எழுந்த வண்ணமாகவே உள்ளன. இதற்கு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் ஏற்கனவே தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். இருப்பினும் 'கோல்ட்' திரைப்படம் குறித்து தவறாக பேசப்படுவதால் கோபத்தின் உச்சிக்கு சென்ற இயக்குனர் புதிய போஸ்ட் ஒன்றை தனது ஃபேஸ்புக் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.
அடிமை இல்லை:
" உங்களுடைய மன நிம்மதிக்காக என்னையும் எனது கோல்ட் திரைப்படத்தை பற்றியும் தவறாக பேசுவது உங்களுக்கு நல்லதாக இருக்கலாம் ஆனால் எனக்கு அது நல்லதல்ல. அதனால் என் முகத்தை இணையத்தில் காட்டாமல் போராட்டம் நடத்துகிறேன். நான் உங்கள் அடிமை இல்லை. நீங்கள் என்னை கிண்டல் செய்யவோ அல்லது பொது இடங்களில் துஷ்பிரயோகம் செய்யவோ நான் உங்களுக்கு உரிமை கொடுக்கவில்லை.
உங்களுக்கு பிடித்தால் எனது படங்களை பாருங்கள். உங்களை கோபங்களை வெளிப்படுத்துவதற்காக என்னுடைய சோசியல் மீடியா பக்கத்திற்கு வராதீர்கள். நீங்கள் இதை தொடர்ந்து செய்து வந்தால் நான் இணையத்தில் கண்ணுக்கு தெரியாதவனாக மாறிவிடுவேன். நான் முன்பு போல் இல்லை. நான் முதலில் எனக்கு உண்மையாக இருப்பேன், பின்னர் எனது மனைவி, குழந்தைகள் மற்றும் மற்றும் என்னை மிகவும் விரும்பும்புபவர்கள் மற்றும் நான் கீழே விழும்போது என் அருகில் நின்றவர்களுக்கு உண்மையாக இருப்பேன்.
மறக்க முடியாது:
நான் கீழே விழுந்தபோது உங்கள் முகத்தில் சிரிப்பை என்னால் மறக்க முடியாது. யாரும் வேண்டுமென்றே விழுவதில்லை. இது இயற்கையால் நடக்கும். எனவே அதே இயற்கையே என்னைத் துணையாகக் காக்கும். இந்த நாள் இனிதாகட்டும்" என விமர்சிப்பவர்களுக்கு ஒரு தகுந்த பதிலடியை கொடுத்துள்ளார். இந்த பதிவு சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.