திருச்சி மாநகரில் கடந்த சில மாதங்களாக திருட்டு, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து திருச்சி மாநகர ஆணையர் உத்தரவின்படி, மாநகர் முழுவதும் காவல்துறையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். இந்நிலையில் திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் மேகநாதன் (வயது 64) தொழிலதிபரான இவர், தனது வீட்டின் அறையில் இரும்பு லாக்கரில் 107 பவுன் நகையை கடந்த மாதத்துக்கு முன்பு வைத்து பூட்டி உள்ளார். பின்னர் இரு தினங்களுக்கு முன்பு அந்த லாக்கரை திறந்து பார்த்தபோது நகைகள் காணாமல் போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்த லாக்கர் பழங்கால லாக்கர் ஆகும். இதனை முழுமையாக திறக்க வேண்டும் என்றால் 12 சாவிகளை பயன்படுத்த வேண்டும். இந்த நிலையில் லாக்கர் எப்படி திறக்கப்பட்டது என்பது மர்மமாக உள்ளது. வீட்டில் தொழிலதிபரின் மனைவி, மகன், மருமகன் உள்ளிட்டோர் உள்ளனர். வீட்டிலிருந்து யாரும் வெளியூரும் செல்லவில்லை. அதே போன்று வீட்டின் பூட்டு எதுவும் உடைக்கப்படவில்லை. லாக்கரை இரும்பு ராடால் கூட உடைக்க முடியாது என போலீசார் தெரிவித்தனர். இது குறித்து மேகநாதன் பாலக்கரை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.




இதனை தொடர்ந்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து 107 பவுன் நகை மாயமானது எப்படி? யார் திருடியது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று திருச்சி பாலக்கரை அருணாச்சலம் நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 55) இவர்உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று விட்டார். இந்நிலையில் வீட்டின் அருகில் வெளி பகுதியில் வீட்டு தெய்வதற்கு சிறிய அளவில் மேடை அமைத்து இருந்த பூஜை அறையில் இருந்த பூஜை பொருட்கள் திருட்டுப் போய் இருப்பத்தை கண்டு ரவிசந்திரன்அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ரவிச்சந்திரன் பாலக்கரை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பூஜை பொருட்களை திருடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் குற்றவாளிகளை விரைவில் கைது செய்து சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளபடும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது. அதேசமயம் தொடர் குற்றசெயல்களில் ஈடுபடுவோர்கள் மீது கடுமையான சட்டம் பாயும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.