தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜுன்.  இவர் இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் சமீபத்தில்'புஷ்பா' படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.


மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான ஃபகத் பாசில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் அடுத்த பாகமும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 




இதனையடுத்து அவர் அட்லீ இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூழலில் நடிகர் அல்லு அர்ஜுன் துபாய் சென்றிருந்தார். அங்கு அவர் 16 நாள்கள் தங்கியிருந்தார்.


இந்நிலையில் அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பினார். அப்போது அவரை வரவேற்கும் வகையில் அல்லு அர்ஜுனின் மகள் ஆர்கா வீட்டுத் தரையில் பூக்கள் மற்றும் இலைகளால் 'வெல்கம் நானா' என எழுதி வரவேற்றிருந்தார்.


 






இதனைப் பார்த்து நெகிழ்ந்துபோன அல்லு அர்ஜுன் மகளின் செயலை புகைப்படம் எடுத்து "16 நாள்கள் கழித்து இனிமையான வரவேற்பு" என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Oviya leave BB Ultimate: கடைசி நேரத்தில் எதிர்பாராத ட்விஸ்ட்! பிக்பாஸில் இருந்து விலகிய ஓவியா?! இதுதான் காரணமாம்!