புஷ்பா 2:
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜூன் நடிப்பில் 3 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான படம் புஷ்பா 2: தி ரூல். இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் ஆகியோர் நடிப்பில் டிசம்பர் 5-ஆம் தேதி திரைக்கு வந்தது புஷ்பா 2 திரைப்படம்.
செம்மர கடத்தலை மையப்படுத்திய கதைக்களம் கொண்ட இந்தப் படத்தில், ஒட்டு மொத்த மாநிலத்தையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைக்கும் அளவிற்கு பணத்தாசை கொண்ட ஒரு கதாபாத்திரத்தில் தான் அல்லு அர்ஜூன் நடித்துள்ளார். படத்தில் இவரோட நடிப்பை பார்க்கும் போது அவருக்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும் என்று சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். ஆக்ஷனோடு கலந்து குடும்ப செண்டிமெண்ட் படமாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
பாடல்கள் சுமாராக இருந்தாலும், ராஷ்மிகா மற்றும் ஸ்ரீலீலாவின் ஹாட்டான டான்ஸ் மூமென்ட்ஸ் ரசிகர்களை சிலிர்க்க வைத்தது. 3 மணி நேரம் 21 நிமிடம் எப்படி போகுதுன்னே தெரியாத அளவிற்கு ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களை வியக்க வைத்துள்ளார் இயக்குனர் சுகுமார்.
ரூ.500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு அல்லு அர்ஜூனுக்கு ரூ.300 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ராஷ்மிகா மந்தனாவிற்கு ரூ.10 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம். இந்த நிலையில் தான் நேற்று சோலோவாக 12000க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியான புஷ்பா 2 படம். முதல் நாளே பல கோடி கல்லாகட்டும் என்று சினிமா விமர்சகர்கள் கூறி வந்த நிலையில், இந்த படத்தின் வசூல் நிலவரம் குறித்து சற்று முன் படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.
புஷ்பா 2 அதிகார பூர்வ வசூல்:
அதன்படி புஷ்பா 2 திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.294 கோடி வரை வசூலை குவித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. இதற்கு முன்னதாக எந்த படமும் செய்யாத மகத்தான சாதனையை இந்தப் படம் படைத்துள்ளது. அதாவது, மாஸ் ஹீரோக்களின் படங்களான ஆர்ஆர்ஆர் ரூ.133 கோடி, ஷாருக்கானின் ஜவான் ரூ.129.6 கோடி, பாகுபலி 2 ரூ.121 கோடி, கேஜிஎஃப் ரூ.116 கோடி ஆகிய படங்களின் வசூல் சாதனையை புஷ்பா 2 முறியடித்து இந்திய சினிமாவையே மிரள வைத்துள்ளது. இனி வரும் காலங்களில் எல்லா படங்களின் மொத்த வசூலையும் புஷ்பா 2 முறியடித்து 2024ல் புதிய சரித்திரம் படமாக முத்திரை பதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.