நடிகர் தனுஷ் சமீபத்தில் ஹாலிவுட்டில் ரஷோ பிரதர்ஸ்ஸின் 'தி க்ரே மேன்' திரைப்படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளதாக தெரிவித்திருந்தார். மேலும் ரஷோ பிரதர்ஸின் சிடாடெல் திரைப்படத்தில் நடிகை சமந்தா ஒப்பந்தமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. அதற்காக அவர் தற்காப்பு கலைகள் பயின்று வருவதாகவும் கூறப்பட்டிருந்தது.






இந்நிலையில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனும் ஹாலிவுட் படத்தில் அறிமுகமாக உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. 






நியூயார்க் நகரில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார் அல்லு அர்ஜுன். அப்போது அவர் பிரபல ஹாலிவுட் இயக்குநரை சந்தித்ததாகவும் படம் குறித்து பேசியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


புஷ்பா 2 :


தற்போது அவர் புஷ்பா 2 திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும் பகத் பாசில் முன்னணி கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளனர். இந்த திரைப்படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறது. புஷ்பா 1 திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றிருந்தது. குறிப்பாக  சமந்தா நடித்திருந்த 'ஓ ஆண்டவா' பாடல் மெகா ஹிட் ஆகியிருந்தது.






புஷ்பா 2 திரைப்படம் 2023 ஆம் ஆண்டு இறுதியில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அல்லு அர்ஜுன் தற்போது அமெரிக்காவில் இருப்பதால் விரைவில் நாடு திரும்பி விரைவில் சூட்டிங் வேலைகளில் ஈடுபடுவார்.