இந்தியாவில் எந்த நடிகருக்கும் கிடைக்காத விருது நடிகர் அல்லு அர்ஜூனுக்கு கிடைத்துள்ளது. 


அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான  ‘புஷ்பா’ படம் மக்களின் எதிர்பார்ப்பை  பூர்த்தி செய்யவில்லை என்றாலும், அல்லு அர்ஜூன் என்ற நடிகரை ஒரு பிராண்டாக உலகம் முழுவதும் கொண்டு சேர்த்தது. அதில் அவர் வெளிப்படுத்தியிருந்த ஸ்டைலும், தேவி ஸ்ரீ இசையில் படத்தில் இடம்பெற்ற பாடல்களும் கடல் தாண்டி ஹிட்டடித்தது.


படத்திற்கும் வெவ்வேறு பிரிவுகளில் விருதுகளும் கிடைத்தன. புஷ்பா படத்தின் இராண்டாம் பாகம் பூஜை போட்டு வேலைகள் நடந்து வரும் நிலையில், தற்போது அல்லு அர்ஜூனுக்கு மிகவும் மதிக்கத்தக்க விருது ஒன்று வழங்கப்பட்டுள்ளது. 




ஆம், அவருக்கு  ‘இந்தியன்  ஆஃப் தி இயர் 2022’ என்ற விருது வழங்கப்பட்டிருக்கிறது. என்டர்டெயின்மென்ட் கேட்டகரியில் டெல்லியில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம்  ‘இந்தியன்  ஆஃப் தி இயர் 2022’ என்ற விருதை பெறும் முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார். 


 






முன்னதாக, இந்திய நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டம் கடந்த வாரம் கோலாகலமாக நடைபெற்றது. கிராமங்கள் தொடங்கி நகரங்கள் வரை கல்வி நிறுவனங்கள், அரசு, தனியார் அலுவலங்கள் என பல இடங்களிலும் கலை, கலாச்சார போட்டிகள் உள்ளிட்ட பல நிகழ்வுகள் நடைபெற்றது. அந்த வகையில் அமெரிக்காவில்  நியூயார்க், நியூ ஜெர்சி மற்றும் கனெக்டிகட் ஆகிய இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நியூயார்க் நகரில் ஆண்டுதோறும் இந்திய சுதந்திர தின அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம்.


 






அந்த வகையில்  75வது ஆண்டு  சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்திய தேசிய கொடியை ஏந்தி செல்லும் கிராண்ட் மார்ஷல் விருந்தினராக இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துபவராக அல்லு அர்ஜூன் அழைக்கப்பட்டார். அதன் படி நியூயார்க்கில் நடந்த அணிவகுப்பில் மனைவியுடன் கலந்து கொண்ட அவர், தேசிய கொடியுடன் வலம் வந்தார்.